சட்டோகிராம்: இந்தியா-பங்ளாதேஷ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்திய அணி இதற்குமுன் பங்ளாதேஷ் அணியிடம் தோற்றதே இல்லை என்பதால் இத்தொடரிலும் அச்சாதனையைத் தக்கவைக்க முயலும்.
காயம் காரணமாக ரோகித் சர்மா விளையாட முடியாத நிலையில் இந்திய அணித்தலைவராக லோகேஷ் ராகுல் செயல்படுவார்.

