சிங்கப்பூர் நீச்சல் வீரர் புதிய சாதனை

சிங்கப்பூர் நீச்சல் வீரர் புதிய சாதனை

1 mins read

சிங்கப்பூர் நீச்சல் வீரர் டியோங் ஸென் வெய் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 25 மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளத்தில் நடந்துவரும் ஃபினா 2022 உலக நீச்சல் வெற்றியாளர் போட்டிகளில் நேற்று நடந்த

50 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலை 22.01 நொடிகளில் முடித்தார் 25 வயதான டியோங்.

ஈராண்டுகளுக்குமுன் ஜப்பான் தேசிய வெற்றியாளர் போட்டிகளில் தக்கேஷி கவமோட்டோ 22.19 நொடிகளில் பந்தயத்தை முடித்திருந்ததே முன்னைய சாதனை.

தமது தகுதிச்சுற்றில் முதல் ஆளாகப் பந்தயத்தை முடித்து, பின்னர் நடக்கவிருந்த அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் டியோங்.

இவ்வாண்டில் டியோங்கின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்து வருகின்றன. ஹனோய் நகரில் மே மாதம் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில், 50 மீ. எதேச்சை பாணி நீச்சல் போட்டியை 22 நொடிகளுக்குள் முடித்த முதல் தென்கிழக்காசியர் எனும் சாதனையை அவர் படைத்தார். அதன்பின் ஜூலையில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில்

50 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.