மொரோக்கோவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உலகக் காற்பந்துக் கிண்ண அரை இறுதி ஆட்டத்தை நேரில் காணக் காத்திருந்த மொரோக்கோ ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
மொரோக்கோ ரசிகர்களை டோஹாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த விமானப் பயணங்களை அனைத்தையும் அந்நாட்டின் தேசிய விமான நிறுவனம் கூறியுள்ளது.
கத்தார் அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகளால், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக மொரோக்கோவின் ராயல் ஏர் மாரோக் தெரிவித்தது.
புதன்கிழமை இரவு மொரோக்கோவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான அரை இறுதி ஆட்டம் நடக்கவுள்ளது.
மொரோக்கோ ரசிகர்களுக்காக கூடுதலாக 30 விமானச் சேவைகளை இயக்கப் போவதாக ராயல் ஏர் மாரோக் கூறியிருந்தது.
ஆனால் நேற்றைய நிலவரப்படி 14 விமானச் சேவைகள் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தாகத் தகவல்கள் கூறின.
அவற்றில் ஏழு விமானச் சேவைகள் நேற்று புறப்பட்டு டோஹா சென்றுவிட்டன.
ஆனால் இன்று செல்லவிருந்த ஏழு விமானச் சேவைகள் ரத்தாகிவிட்டன.
காற்பந்து ஆட்டத்தைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கி, ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்த பல ரசிகர்களால் டோஹா செல்ல இயலவில்லை.
விமானப் பயணச்சீட்டுகளுக்குச் செலுத்திய பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக ராயல் ஏர் மாரோக் கூறியுள்ளது.
ஆனால் வரலாற்று சிறப்புமிக்க ஆட்டத்தைக் காண முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பாதிக்கப்பட்ட ரசிகர்கள் புலம்புகின்றனர்.

