சிங்கப்பூரிலும் கொண்டாட்டம்

சிங்கப்பூரிலும் கொண்டாட்டம்

1 mins read

உல­கக் கிண்­ணக் காற்­பந்து இறுதிப் போட்­டிக்கு அர்­ஜென்­டினா அணி தகு­தி­பெற்­றதை சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் அர்­ஜென்­டினா நாட்­ட­வரும் கொண்­டாடி மகிழ்ந்­த­னர்.

"எங்­க­ளுக்கு இது வெறும் ஆட்­டம் மட்­டு­மன்று. இது குடும்­பம், இது வர­லாறு, கடந்த 30 ஆண்­டு­களில் பல­முறை கிண்­ணத்தை நெருங்­கி­யும் அது கைசே­ரா­த­தால் கிட்­டிய ஏமாற்­றம். இப்­போது மீண்­டும் இறு­திப் போட்­டிக்கு முன்­னேறி­ உள்­ளோம். இத்­த­ரு­ணத்தை விவ­ரிக்க வார்த்­தை­கள் இல்லை," என்­றார் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வேதி­யி­யல் பேரா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றும் திரு கில்­லர்மோ பஸன்.

சைம்ஸ் லான் பகு­தி­யில் பெரிய திரை­யில் ஒளி­ப­ரப்­பப்­பட்ட அரை­ இ­றுதி ஆட்­டத்­தைக் காணத் திரண்­டி­ருந்த 50க்கும் மேற்­பட்­டோ­ரில் திரு பஸ­னும் ஒரு­வர்.

அர்­ஜென்டினா­வின் 3வது கோலை அல்­வ­ரெஸ் அடித்து, வெற்­றியை உறு­திப்­ப­டுத்­தி­ய­தும் அவர்­கள் அனைவரும் உணர்ச்சி பொங்க மகிழ்ச்சிக் குரல் எழுப்பினர்.

இறுதி ஆட்­டத்­தில் கடும் போட்டி இருக்­கும் என எதிர்­பார்க்­கி­றார் சிங்­கப்­பூ­ருக்­கான அர்­ஜென்­டினா தூதர் மௌரி­சியோ நைன்.

"எங்­க­ளது அணி வலி­மை­யா­னது. அதே நேரத்­தில், எதி­ர­ணி­யின் வலி­மை­யை­யும் நாம் மதிக்க வேண்­டும்," என்­றார் அவர்.