விமான சேவைகள் ரத்து; மொரோக்கோ ரசிகர்கள் ஏமாற்றம்

விமான சேவைகள் ரத்து; மொரோக்கோ ரசிகர்கள் ஏமாற்றம்

1 mins read

ரபாத்: உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் மொரோக்கோ அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், அப்போட்டியைத் தன் நாட்டு ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்கும் நோக்கில், 'ராயல் ஏர் மரோக்' எனும் மொரோக்கோ விமான சேவை நிறுவனம் 14 சிறப்பு விமானங்களை இயக்க இருந்தது. ஆனால், கத்தார் கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி, கடைசி நேரத்தில் ஏழு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.