தந்தையைப் போலவே மகன்

தந்தையைப் போலவே மகன்

1 mins read

கோவா: இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் மகன் அவரைப் போலவே ரஞ்சி கிண்ணப் போட்டியில் தமது அறிமுக ஆட்டத்தில் சதம் அடித்துள்ளார்.

கோவா அணிக்காக விளையாடும் 23 வயது அர்ஜுன் டெண்டுல்கர் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 120 ஓட்டங்கள் எடுத்தார்.

1988ஆம் ஆண்டில் குஜராத்துக்கு எதிரான தமது அறிமுக ஆட்டத்தில் சச்சின் சதம் அடித்தார். அப்போது அவருக்கு 15 வயது.

மும்பை அணியில் இருந்தும் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் அர்ஜுன் கோவா அணியில் இணைந்தார்.