பயிற்றுவிப்பாளர்கள்மீது திரும்பும் கவனம்

பயிற்றுவிப்பாளர்கள்மீது திரும்பும் கவனம்

2 mins read
8fee139e-10c0-4734-8636-eac0c7b85d9e
-
multi-img1 of 2

லுசாய்ல்: இவ்­வாண்­டின் உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்டி உச்­சக்­கட்­டத்தை நெருங்­கி­விட்­டது. லய­னல் மெஸ்ஸி, கிலி­யோன் எம்­பாப்பே, வினி­சி­யஸ், லுக்கா மொட்­ரிச் உள்­ளிட்ட பல விளை­யாட்­டா­ளர்­கள் ரசி­கர்­க­ளின் மனத்­தில் நீங்கா இடத்­தைப் பிடித்­துள்­ள­னர்.

பிரான்ஸ், அர்­ஜென்­டினா ஆகிய அணி­கள் இறு­தி­யாட்­டத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளன. அதற்கு முக்­கி­யக் கார­ணம் விளை­யாட்­டா­ளர்­களை சிறப்­பாக விளை­யாட வைத்த இந்த அணி­க­ளின் பயிற்­று­விப்­பா­ளர்­கள்.

1998ஆம் ஆண்டு முதன்­முறை­யாக உல­கக் கிண்­ணத்தை வென்­றது பிரான்ஸ். அப்­போது அணித் தலை­வ­ராக இருந்­த­வர்­ பிரான்­சின் தற்­போ­தைய பயிற்­று­விப்­பாளர் டிடி­யேர் டேஷோம்.

சென்ற உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் பயிற்­று­விப்­பா­ள­ரா­க­வும் கிண்­ணத்தை வென்­றார் இவர். வெற்றி பெறும் உணர்வு ரத்­தத்­தில் ஊறிப்­போன தலை­வ­ராக விளங்­கு­பவர் டேஷோம். விளை­யாட்­டா­ள­ரா­க­வும் பயிற்று­விப்­பாளராகவும் பிரான்ஸ் அணியை ஊக்­கு­வித்து வந்­துள்­ளார்.

இந்த உல­கக் கிண்­ணப் போட்டி தொடங்­கு­வ­தற்கு முன்பு பிரான்ஸ் இவ்­வ­ளவு தூரம் முன்­னே­றும் என்று யாரும் எதிர்­பார்க்­க­வில்லை.

அணி விளை­யா­டும் முறையை மாற்றி தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ர­ராக இருந்த நட்­சத்­தி­ரம் அன்­டு­வான் கிறீஸ்­மன்-ஐ மத்­தி­யத் திடல் வீர­ராக உரு­வெ­டுக்­கச் செய்து பிரான்­சுக்­குப் புத்­து­யிர் தந்­துள்­ளார் டேஷோம்.

அதே வேளை­யில், இவர் விளை­யாட்­டா­ளர்­க­ளைக் கையா­ளும் வித­மும் அற்­பு­தம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அடிக்­கடி விளை­யா­டு­வோர் மட்­டு­மின்றி பிரான்­சின் மாற்று ஆட்­டக்­கா­ரர்­களும் தேவைப்­படும் வேளை­களில் சிறப்­பாக விளை­யா­டி­யி­ருக்­கின்­ற­னர்.

டேஷோ­மிற்கு எதி­ரா­கக் கள­மி­றங்­கும் அர்­ஜென்­டினா பயிற்­று­விப்­பா­ளர் லய­னல் ஸ்க­லோ­னியோ அதி­கம் அனு­ப­வம் இல்­லா­த­வர். மறைந்த முன்­னாள் அர்­ஜென்­டீ­னிய காற்­பந்து வீரர் டியேகோ மர­டோனா உள்­ளிட்­டோ­ரின் கண்­ட­னத்­திற்கு ஆளா­ன­வர்.

சென்ற உல­கக் கிண்ணப் போட்­டி­யின் இரண்­டாம் சுற்­றில் வெளி­யேற்­றப்­பட்­டது அர்­ஜென்­டினா. அந்த விறு­வி­றுப்­பான ஆட்­டத்­தில் அணியை வெளி­யேற்­றி­யது டேஷோ­மின் பிரான்ஸ்­தான்.

அப்­போட்­டி­யில் அர்­ஜென்­டி­னா­வின் விளை­யாட்டு பல தரப்­பி­ன­ரைக் கோபப்­ப­டுத்­தும் வகை­யில் அமைந்­தது. அதற்­குப் பிறகே ஸ்க­லோனி அணி­யின் பயிற்­று­விப்­பா­ள­ரா­கப் பொறுப்­றேற்­றார். அதற்கு முன்பு துணை பயிற்­று­விப்­பா­ள­ராக இருந்­தார்.

ஒரு­வ­ழி­யாக அர்­ஜென்­டினா அணியைச் சீராக்கி இந்த உல­கக் கிண்­ணப் போட்­டிக்­குத் தகு­தி­பெற வைத்த ஸ்க­லோ­னி­க்குக் காத்­தி­ருந்­தது சவூதி அரே­பி­யா­வுக்கு எதி­ரான முதல் ஆட்­டம். எதிர்­பாராவித­மாக அந்த ஆட்­டத்­தில் தோல்­வி­ய­டைந்­தது அர்­ஜென்­டினா.

எனி­னும், அதற்­குப் பிறகு படிப்­ப­டி­யாக மீண்டு­வந்து அரை­யி­று­தி­யாட்­டத்­தில் பிர­மா­தமாக ஆடி குரோ­வே­ஷி­யாவை வென்றது.

இப்­ப­டிப்­பட்ட கரடுமுர­டான பாதை­யைக் கடந்து வந்­துள்­ளார் ஸ்க­லோனி, அர்­ஜென்­டி­னா­வுக்கு உல­கக் கிண்­ணத்தை வென்று தந்­தால் அந்­நாட்­டின் ஆகச் சிறந்த பயிற்­று­விப்­பா­ளர்­களில் ஒரு­வ­ராக உரு­வெ­டுப்­பார் என்­ப­தில் சந்­தே­கம் இல்லை.

நாளை இரவு 11 மணிக்கு இறு­தி­யாட்­டம் அரங்­கே­றும்.