உலகக் கிண்ணப் போட்டி இறுதியாட்ட நடுவர் தெரிவு

உலகக் கிண்ணப் போட்டி இறுதியாட்ட நடுவர் தெரிவு

1 mins read
70bc9854-0d16-4051-8fa9-83441b258e85
-

லுசாய்ல்: நாளை அரங்­கே­ற­வுள்ள உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­ இறு­தி­யாட்­டத்­தின் நடு­வ­ராக போலந்­தைச் சேர்ந்த சிமோன் மார்­சி­னி­யாக் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டுள்­ள­தாக அனைத்­து­ல­கக் காற்­பந்­துச் சம்­மே­ள­னம் அறி­வித்­துள்ளது.

இறு­தி­யாட்­டத்­தில் அர்­ஜென்­டி­னா­வும் பிரான்­சும் மோத­வுள்­ளன. ஏற்­கெ­னவே போட்­டி­யில் இவ்­விரு அணி­களும் மோதிய இரண்டு ஆட்­டங்­களில் நடு­வ­ராக இருந்­தி­ருக்­கி­றார் 41 வயது மார்­சி­னி­யாக்.

இரண்­டாம் சுற்­றில் ஆஸ்­தி­ரேலியா­வும் அர்­ஜென்­டி­னா­வும் மோதிய ஆட்­டம், முதல் சுற்­றில் பிரான்­சும் டென்­மார்க்­கும் மோதிய ஆட்­டம் ஆகிய இரண்­டி­லும் இவர் நடு­வ­ராக இருந்­தி­ருக்­கி­றார்.

இறு­தி­யாட்­டத்­தில் இவ­ரு­டன் பணி­யாற்­ற­வுள்ள துணை நடு­வர்­களும் போலந்­தைச் சேர்ந்­த­வர்­கள். இவர்­கள் மூவ­ரும் ஏற்­கெ­னவே யூரோ 2016 உள்­ளிட்ட போட்­டி­களில் நடு­வர்­க­ளாக இருந்­த­வர்­கள்.