அல் கோர்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரான்சும் மொரோக்கோவும் மோதிய அரையிறுதியாட்டத்தின் நடுவருக்கு எதிராக அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்திடம் அதிகாரபூர்வமாக கண்டனம் தெரிவித்துள்ளது மொரோக்கோ காற்பந்துச் சங்கம். அந்த ஆட்டத்தின் முற்பாதியில் மெக்சிகோவைச் சேர்ந்த சிசார் ராமோஸ் என்ற நடுவர் தங்களின் அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கவில்லை என்பது மொரோக்கோவின் குற்றச்சாட்டு.
ஆட்டத்தில் தோல்வியடைந்த மொரோக்கோ போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

