வரலாற்று நாயகர்களுக்கான ஆறுதல் பரிசு

வரலாற்று நாயகர்களுக்கான ஆறுதல் பரிசு

2 mins read
4a8841c5-08d3-4ef6-81ea-72151241464d
-
multi-img1 of 2

அல் ரயான்: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் ஆறு­தல் பரி­சா­கக் கரு­தப்­படும் வெண்­க­லப் பதக்­கத்­துக்­கான போட்­டி­யில் கள­மி­றங்­க­­வுள்­ளன குரோ­வே­ஷியா, மொரோக்கோ. போட்­டி­யின் அரை­யி­று­திச் சுற்­றில் தோல்­வி­ய­டைந்த இவ்­விரு அணி­களும் மூன்­றாம் இடத்­தைத் தீர்­மா­னிக்­கும் ஆட்­டத்­தில் இன்று மோது­கின்­றன. போட்டி தொடங்­கு­வ­தற்கு முன்பு இந்த அணி­கள் இவ்­வ­ளவு தூரம் வரும் என்று பல­ரும் எதிர்­பார்க்­க­வில்லை.

சென்ற போட்­டி­யில் காற்­பந்து வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக இறு­தி­யாட்­டம் வரை முன்­னே­றிய குரோ­வே­ஷியா இம்­மு­றை­யும் சிறப்­பா­கச் செய்­தது ஆச்­ச­ரி­யம் தரும் ஒன்று.

இப்­ப­டிப்­பட்ட சூழ­லில் மூன்­றா­வது இடத்­தைப் பிடிப்­ப­தற்­கான ஆட்­டம் அர்த்­த­மற்­றது அல்ல என்று குறிப்­பிட்­டுள்­ளார் குரோ­வே­ஷிய வீரர் ஆண்ட்­ரெய் கிரா­மா­ரிச்.

"உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் பதக்­கம் வெல்­லும் விளை­யாட்­டா­ளர்­கள் அவ­ர­வர் நாட்­டில் வீரர்­க­ளா­கக் கரு­தப்­ப­டு­வர். அத­னால் அவர்­கள் (மொரோக்கோ விளை­யாட்­டா­ளர்­கள்) தங்­க­ளின் தலை­யெ­ழுத்­தைத் தீர்­மா­னிக்க விளை­யா­டு­வர்். அதைத்­தான் நாங்­களும் செய்­யப்­போ­கி­றோம்," என்­றார் கிர­மா­ரிச்.

அரை­யி­று­திச் சுற்று வரை முன்­னே­றிய முதல் ஆப்­பி­ரிக்க அணி என்ற பெரு­மையை மொரோக்கோ பெற்­றி­ருப்­பது அந்த கண்­டத்­திற்­கும் அரபு உல­கிற்­கும் இன்ப அதிர்ச்­சி­யாக அமைந்­துள்­ளது.

உல­கக் கிண்­ணத்தை வெல்­லும் வாய்ப்­பு­கள் அதி­கம் இருப்­ப­தாக கரு­தப்­பட்ட பெல்­ஜி­யம், ஸ்பெ­யின், போர்ச்­சு­கல் ஆகிய மூன்று அணி­க­ளை­யும் வென்று அரை­யி­று­திச் சுற்­றுக்கு முன்­னே­றி­யது மொரோக்கோ. அரை­யி­று­திச் சுற்­றில் நடப்பு வெற்றி­யா­ளர் பிரான்­சி­டம்­தான் தோல்­வி­ய­டைந்­தது. அந்த ஆட்­டத்­தி­லும் பிரான்சை எளி­தில் வெற்­றி­ய­டைய விட­வில்லை மொரோக்கோ.

ஏற்­கெ­னவே இவ்­வாண்டு உல­கக் கிண்­ணப் போட்­டி­யின் முதல் சுற்­றில் குரோ­வே­ஷி­யா­வும் மொரோக்­கோ­வும் சந்­தித்­தி­ருக்­கின்­றன. அந்த ஆட்­டம் கோலின்றி சம­நி­லை­யில் முடிந்­தது.