லுசாய்ல்: உலகக் காற்பந்தில் மாபெரும் அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் அர்ஜென்டினா கடைசியாக 1986ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்றது. அதற்குப் பிறகு இருமுறை போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறியது. ஆனால் கிண்ணத்தை வெல்லத் தவறியது.
1986ஆம் ஆண்டில் அணிக்குக் கிண்ணத்தை வென்று தந்தவர் மறைந்த நட்சத்திரம் டியேகோ மரடோனா. அதிக உதவியின்றி கிட்டத்தட்ட தாமாகவே அர்ஜென்டினாவுக்குக் கிண்ணத்தை வென்று தந்தார் இவர். போட்டியின் இறுதியாட்டத்தில் (மேற்கு) ஜெர்மனியை வென்றது அர்ஜென்டினா.
பின்னர் 1990, 2014ஆம் ஆண்டுப் போட்டிகளின் இறுதியாட்டங்களிலும் ஜெர்மனியைச் சந்தித்தது. இரண்டு முறையும் தோல்வியுற்றது அர்ஜென்டினா.
1978ஆம் ஆண்டில் முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்றது அர்ஜென்டினா. அதன் பிறகு முதன்முறையாக இறுதியாட்டத்தில் ஜெர்மனிக்குப் பதிலாக வேறு அணியைச் சந்திக்கிறது.

