அரிய சாதனையைக் குறிவைக்கும் பிரான்ஸ்

அரிய சாதனையைக் குறிவைக்கும் பிரான்ஸ்

1 mins read
3fae822a-9ec4-49b5-a6ef-bc6e08f21dd7
-

லுசாய்ல்: உல­கக் கிண்ண நடப்பு வெற்­றி­யா­ள­ரான பிரான்ஸ் 1998ஆம் ஆண்­டு­வரை அதி­கம் கவ­னிக்­கப்­ப­டாத அணி­யாக இருந்­தது என்று சொல்­ல­லாம். ஆனால் அந்த ஆண்டு சொந்த மண்­ணில் முதன்­மு­றை­யாக கிண்­ணத்தை வென்ற பிறகு மூன்று முறை இறு­தி­யாட்­டத்­திற்கு முன்­னே­றி­விட்­டது. மொத்­தம் இரு­முறை கிண்­ணத்தை வென்­றுள்­ளது.

இப்­போது நடப்பு வெற்­றி­யா­ள­ராக உல­கக் கிண்­ணத்தை வெல்­லும் முயற்­சி­யில் இறங்­கு­கிறது. இது. 60 ஆண்­டு­க­ளாக எந்த அணி­யும் செய்­யாத ஒன்று.