லுசாய்ல்: இன்றைய உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தை முன்னிட்டு பிரான்ஸ் அணியில் சில விளையாட்டாளர்களிடையே சளிக்காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்ட கிருமித்தொற்று இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆட்டத்தில் களமிறங்கவிருப்பதை ஒட்டி விளையாட்டாளர்களிடையே எழக்கூடிய துடிப்பே தடங்கலை அகற்றத் தனது அணிக்குக் கைகொடுக்கும் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் அணித் தலைவரும் கோல் காப்பாளருமான ஊகோ லோரிஸ்.
"இதற்கு முன்பெல்லாம் வாகை சூடிய பிரான்ஸ் அணிகளுக்குக் குழு உணர்வுதான் உறுதுணையாக இருந்திருக்கிறது.
"அதிலிருந்து நாம் ஊக்கம் பெறலாம். போட்டி தொடங்கியதிலிருந்தே அணியில் ஊக்கமளிக்கும் உணர்வு இருந்து வந்துள்ளது. நாளைக்கும் அதே உணர்வு இல்லாமல் போவதற்குக் காரணம் ஏதும் இல்லை," என்று நேற்று குறிப்பிட்டார் லோரிஸ்.
கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்ட ரஃபாயெல் வரான், இப்ராஹிம் கொனாட்டே, உள்ளிட்டோர் தனியாகப் பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் இறுதியாட்டத்தில் விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது.
கிருமித்தொற்றுக்கு ஆளான கிங்ஸ்லீ கோமன், டாயோட் உப்பமெக்கானோ, ஏட்ரியன் ராபியோ ஆகிய மூவரும் மொரோக்கோவுக்கு எதிரான அரையிறுதியாட்டத்தில் விளையாடவில்லை. எனினும், இறுதியாட்டத்தில் இவர்கள் இடம்பெறுவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் பிரான்ஸ் பயிற்றுவிப்பாளர் டிடியே டேஷோம்.
இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்தே பல பிரச்சினைகளைக் கடந்து வந்துள்ளது பிரான்ஸ். அணியின் முக்கியமான விளையாட்டாளர்களாகக் கருதப்படும் கரீம் பென்ஸீமா, பால் பொக்பா, இங்கோலோ கான்டே உள்ளிட்டோர் காயமுற்றதால் போட்டியில் விளையாட முடியாமல் போனது.
பிரச்சினைகளைத் தொடர்ந்து பிரான்ஸ் போட்டியில் அதிகம் சோபிக்காது என்று பல தரப்பினர் கருதினர்.
ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மிகச் சிறப்பாக ஆடி வந்துள்ளனர் டேஷோமின் வீரர்கள்.
இறுதியாட்டத்தை முன்னிட்டு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ்

