மாபெரும் அவதாரத்தில் அடுத்த உலகக் கிண்ணம்

மாபெரும் அவதாரத்தில் அடுத்த உலகக் கிண்ணம்

2 mins read
29b4a5b5-e7e2-4148-983f-732c6eacef49
-

டொரோன்டோ: இவ்­வாண்­டின் உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்டி சிறிய நாடான கத்­தா­ரில் அரங்­கேறி­யுள்­ளது. இன்­னும் சொல்­லப் போனால் கத்­தார்­தான் இப்­போட்டியை ஏற்று நடத்­தி­யிருக்கும் ஆகச் சிறிய நாடு.

அமெ­ரிக்­கா­வின் கனெக்­டி­கட் மாநி­லத்­தை­விட சிறி­யது கத்­தார்.

அடுத்­த­தாக 2026ஆம் ஆண்­டில் நடை­பெ­ற­வுள்ள உல­கக் கிண்­ணப் போட்டி முற்­றி­லும் மாறு­பட்­டி­ருக்­கும். ஒன்­றல்ல மூன்று நாடு­கள் போட்­டியை ஏற்று நடத்­தவுள்ளன.

கனடா, அமெ­ரிக்கா, மெக்­சிகோ ஆகிய நாடு­களில் 2026 உல­கக் கிண்­ணப் போட்டி அரங்­கே­றும்.

இதற்கு முன்பு ஒரு­மு­றை­தான் ஒன்­றுக்­கும் மேற்­பட்ட நாடு­கள் ஒரே உல­கக் கிண்­ணப் போட்­டியை ஏற்று நடத்­தின. ஜப்­பான், தென்­கொ­ரியா ஆகிய நாடு­களில் 2002ஆம் ஆண்­டுப் போட்டி அரங்­கே­றி­யது.

இதற்கு முன்பு தனி­யாக இரு­முறை போட்­டியை ஏற்று நடத்­தி­யிருக்­கிறது மெக்­சிகோ. 1970, 1986ஆம் ஆண்­டுப் போட்­டி­கள் மெக்­சி­கோ­வில் நடை­பெற்­றன.

அமெ­ரிக்கா 1994ஆம் ஆண்­டில் போட்­டியை ஏற்று நடத்­தி­யது. கன­டா­விற்கு முதன்­மு­றை­யாக இந்த வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

1986, 1994ஆம் ஆண்­டுப் போட்டி­களில் 24 அணி­கள் மட்­டுமே பங்­கேற்­றன. அதற்­குப் பிறகு 1998ஆம் ஆண்­டுப் போட்­டி­யி­லி­ருந்து பங்­கேற்­கும் அணி­க­ளின் எண்­ணிக்கை 32க்கு உயர்த்­தப்­பட்­டது.

இனி 2026ஆம் ஆண்­டுப் போட்டி­யி­லி­ருந்து அந்த எண்­ணிக்கை 48க்கு அதி­க­ரிக்­கப்­படுகிறது. அமெ­ரிக்கா, கனடா, மெக்­சிகோ ஆகிய நாடு­களில் இருக்­கும் 16 நக­ரங்­களில் ஆட்­டங்­கள் இடம்­பெ­றும்.

அனைத்து ஆட்­டங்­களும் சுமூக­மாக நடை­பெ­று­வதை உறு­தி­செய்­வதே பெரும் சவால். அத்­து­டன் அணி­க­ளுக்­கான பயிற்சி வச­தி­களை­யும் செய்து தர­வேண்­டும்.

பெரும்­பா­லான ஆட்­டங்­கள் அமெ­ரிக்­கா­வில் நடை­பெ­றும். அந்­நாட்­டின் 11 நக­ரங்­களில் ஆட்­டங்­கள் இடம்­பெ­றும். மெக்­சி­கோ­வின் குவா­டா­ல­ஹரா, மொன்­டெரே, தலை­ந­கர் மெக்­சிகோ சிட்டி, கன­டா­வின் டொரோன்டோ, வான்­கூவர் ஆகிய நக­ரங்­களிலும் ஆட்­டங்­கள் நடை­பெ­றும்.

போட்­டி­யின் காலி­று­தி­யாட்­டங்­கள், அரை­யி­று­தி­யாட்­டங்­கள், இறுதி­யாட்­டம் ஆகி­யவை அமெ­ரிக்­கா­வில் நடக்­கும்.

வழக்­கத்­துக்கு மாறாக இவ்­வாண்­டின் போட்டி ஆண்­டி­று­தி­யில் நடை­பெ­று­கிறது. கோடைக்­கா­லத்­தில் கத்­தா­ரின் சுட்­டெ­ரிக்­கும் வெயி­லைத் தவிர்க்க பங்­கேற்­கும் அணி­களுக்கு உத­வு­வது அதன் நோக்கம்.

அடுத்த போட்டி மீண்­டும் ஆண்­டின் நடுப்­ப­கு­தி­யில் நடை­பெ­றும்.

மாறு­பட்ட சூழ­லில் இவ்­வாண்­டின் உல­கக் கிண்­ணப் போட்டி இடம்­பெற்­றுள்­ளது. கத்­தா­ரின் மனித உரிமை விவ­கா­ரங்­கள் உள்­ளிட்­ட­வற்­றின் தொடர்­பில் எழுந்த பல சர்ச்சை­க­ளுக்கு மத்­தி­யில் போட்டி நடை­பெற்றுள்ளது.

போட்­டியை ஏற்று நடத்­தும் பொறுப்பு கத்­தா­ருக்கு வழங்­கப்­பட்­ட­தில்­கூட சர்ச்­சை­கள் இருந்தன. இருந்­தா­லும் இந்த உல­கக் கிண்­ணப் போட்­டி­தான் ஆகச் சிறந்­த­தென்று அனைத்­து­ல­கக் காற்­பந்­துச் சம்­மே­ள­னத்­தின் தலை­வர் ஜியானி இன்­ஃபன்­டினோ அண்­மை­யில் பாராட்­டி­யி­ருந்­தார்.

சர்ச்­சை­கள் இருந்­தா­லும் ஆட்­டங்­கள் சுமூ­க­மாக நடை­பெற்­றன, பல எதிர்­பாரா திருப்­பங்­கள் கவ­னத்தை ஈர்த்­தன.

இதற்கு முன்பு இல்­லாத வகை­யில் அடுத்­த போட்­டி­யின் முதல் சுற்­றில் மூன்று அணி­க­ளைக் கொண்ட பிரி­வு­கள் இருக்­கும் என்று முத­லில் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், இந்­தப் போட்­டி­யின் முதல் சுற்று மிக­வும் விறு­விறுப்­பாக இருந்­த­தைத் தொடர்ந்து திட்­டம் மாற்­றப்­ப­ட­லாம் என்றும் இன்ஃபன்டினோ கூறியிருந்தார்.