உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் மொரோக்கோவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது நிலையை பிடித்துள்ளது குரோஷியா. தனது அணியின் உலகக் கிண்ணப் பயணம் முடிவடைந்திருந்தாலும், அணிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக அதன் பயிற்றுவிப்பாளர் கூறியுள்ளார்.
காலிறுதி ஆட்டத்தில் பிரேசிலை தோற்கடித்திருந்தாலும், போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருப்பது குரோஷியாவுக்கு வெற்றிக்கனியாக அமைந்ததாக குரோஷியா ஆட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
மொரோக்கோ ஆட்டக்காரர்கள் கடுமையான போட்டி கொடுத்ததாக குரோஷிய அணி கூறியது.
யூரோ 2024, நேஷன்ஸ் லீக் ஆகிய போட்டிகளில் குரோஷியா சிறப்பாக போட்டியிடும் எனும் நம்பிக்கையும் உற்சாகமும் குரோஷியா ரசிகர்களிடம் உதித்துள்ளது.


