உலகக் கிண்ணம் 2022: உச்சக்கட்டத்தை நெருங்கும் போட்டி

உலகக் கிண்ணம் 2022: உச்சக்கட்டத்தை நெருங்கும் போட்டி

1 mins read
cab95736-34e9-4918-86a8-233ef3678afe
இன்று இறுதி ஆட்டத்தில் களமிறங்கும் பிரான்ஸ், அர்ஜென்டினா (படம்: ராய்ட்டர்ஸ்) -

உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்னும் சில மணிநேரத்தில் தொடங்கவுள்ளது. அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய இரண்டு ஜாம்பவான்கள் களமிறங்குகின்றன.

தொடர்ந்து இரண்டாவது முறை கிண்ணத்தை வெல்லும் வேட்கையுடன் களமிறங்குகிறது பிரான்ஸ். போட்டியின் 92 ஆண்டு வரலாற்றில் இதுவரை பிரேசில், இத்தாலி ஆகிய நாடுகள் மட்டும் தொடர்ந்து இரண்டு முறை கிண்ணத்தை வென்றுள்ளன.

மறுபுறம், உலகின் ஆகச் சிறந்த காற்பந்து வீரர் எனக் கருதப்படும் லயனல் மெஸ்ஸி அர்ஜெண்டினா அணிக்கு விளையாடுகிறார். இதுவே அவரது இறுதி ஆட்டமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். இதனால் கிண்ணத்தை வெல்லது அவருடைய தனிப்பட்ட இலக்காக அமைந்துள்ளது.

அர்ஜென்டினா மக்களின் மொத்த மகிழ்ச்சியும் இந்த உலகக் கிண்ணத்தை வெல்வதில் உள்ளது. கடுமையான பொருளியல் நெருக்கடியில் அந்நாடு சிக்கியுள்ளது. பலரும் வறுமையில் தவித்துவருகின்றனர். இந்நிலையில் உலகக் கிண்ணத்தை தங்கள் நாடு வென்றால், அது அனைவரைக்கும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் அளிக்கும் என்பது அர்ஜென்டின மக்களின் எதிர்பார்ப்பு.

ஏழு உலகக் கிண்ணப் போட்டிகளில் நான்கு முறை இறுதி ஆட்டம்வரை தகுதிபெற்றுள்ளது பிரான்ஸ். இறுதியாக பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் 2018 உலகக் கிண்ண போட்டியில் மோதின. அப்போது 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வென்றது பிரான்ஸ்.

அந்த தன்னம்பிக்கையுடன் இறுதி ஆட்டத்தில் களமிறங்கவுள்ளது பிரான்ஸ். எப்படியாவது பழி தீர்க்கும் முனைப்புடன் கடும் போட்டி கொடுக்கவுள்ளது அர்ஜென்டினா.