அல் ரயான்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணியைத் தீர்மானிக்கும் ஆட்டத்தில் குரோவேஷியாவிடம் 2-1 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது மொரோக்கோ. அதனால் இந்த அணிக்கு வெண்கலப் பதக்கம்கூட கிடைக்கவில்லை.
எனினும், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க பதக்கம் தேவையில்லை என்பதற்கு மொரோக்கோ ஓர் எடுத்துக்காட்டு. மாபெரும் அணிகளாகக் கருதப்படும் பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகியவற்றை வீழ்த்தி உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெற்ற மொரோக்கோ, கிண்ணத்தை வெல்லும் என்றுகூட சிலர் கருதினர்.
நெஞ்சை நிமிர்த்தியபடி விடைபெறுகிறது மொரோக்கோ.

