வெண்கலத்தில் அங்கீகாரம்

வெண்கலத்தில் அங்கீகாரம்

2 mins read
f2cf4ca0-b3ff-4b9c-aa8d-20655d6365d6
-

அல் ரயான்: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் சிறப்­பாக விளை­யா­டி­யும் இறு­தி­யாட்­டத்­திற்கு முன்­னேற முடி­யா­மல் போன குரோ­வே­ஷி­யா­வுக்கு வெண்­க­லப் பதக்­கத்­தின் மூலம் ஆறு­தல் கிடைத்­தது.

இவ்­வாண்­டின் போட்­டி­யில் மூன்­றா­வது இடத்­தைப் பிடிக்­கும் அணி­யைத் தீர்­மா­னிக்கு ஆட்­டத்­தில் 2-1 எனும் கோல் கணக்­கில் வென்ற குரோ­வே­ஷியா, சென்ற போட்­டி­யில் எதிர்­பாரா வித­மாக இறு­தி­யாட்­டம் வரை சென்­றது. அதற்­குப் பிறகு இவ்­வாண்­டின் போட்­டி­யில் அணி சோபிக்­குமா என்­பது கேள்­விக்­குறி­யாக இருந்­தது.

எனி­னும், காலி­று­தி­யாட்­டத்­தில் பெனால்­டி­க­ளின் மூலம் கவர்ச்­சி­யாக விளை­யா­டி­வந்த பிரே­சிலை வென்று குரோ­வே­ஷியா அரை­யிறு­திச் சுற்­றுக்கு முன்­னே­றி­யது அதன் ரசி­கர்­க­ளுக்கு இன்ப அதிர்ச்­சி­யாக அமைந்­தது. அரை­யி­று­தி­யாட்­டத்­தில் அர்­ஜென்­டி­னா­வி­டம் தோல்வி­யடைந்­தி­ருந்­தா­லும் மொரோ­க்கோ­வுக்கு அடுத்­த­ப­டி­யாக குரோ­வே­ஷி­யா­வின் விளை­யாட்­டு­தான் பல­ரைக் கவர்ந்­தது என்­றால் அது மிகை­யில்லை.

"எனது அணி­யில் உள்ள சில வய­தான விளை­யாட்­டா­ளர்­க­ளுக்கு இதுவே கடைசி உல­கக் கிண்­ணப் போட்­டி­யாக இருக்­கும். அதே வேளை­யில் அணி­யில் சில இளம் வீரர்­களும் இருக்­கின்­ற­னர். அது குரோ­வே­ஷி­யா­வுக்கு பெரும் நற்­செய்தி," என்­றார் குரோ­வே­ஷிய அணி­யின் பயிற்­று­விப்­பா­ளர் ஸ்லாட்கோ டாலிச். அணி­யின் சில முக்­கி­ய­மான விளை­யாட்­டா­ளர்­களுக்கு வய­தா­கி­விட்டபோதும் ஒளி­ம­ய­மான எதிர்­கா­லம் இருப்­பதை அவர் குறிப்­பிட்­டார்.

உல­கக் கிண்­ணப் போட்­டி­களில் இது­வரை இரண்டு முறை மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளது குரோ­வே­ஷியா. வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக சென்ற போட்­டி­யில் இறு­தி­யாட்­டத்­திற்கு முன்­னேறி அசத்­தி­யது.

இந்­நி­லைில் குரோ­வே­ஷிய அணித் தலை­வ­ரான 37 வயது லுக்கா மோட்­ரிச் தேசிய அணிக்கு அடுத்த ஆண்­டும் தொடர்ந்து விளை­யா­டப்­போ­வ­தா­கத் தெரி­வித்­துள்ளார்.

எனி­னும், யூரோ 2024 போட்­டி­யில் அவர் பங்­கேற்­கக்­கூ­டும் என்று முன்­ன­தாக சொல்­லப்­பட்­டது. அது குறித்து மோட்­ரிச் எந்­தத் தக­வ­லும் வெளி­யி­ட­வில்லை.

யூரோ 2024 போட்­டி­யில் மோட்­ரிச் விளை­யா­டு­வார் என்று டாலிச் நம்­பிக்கை கொண்­டுள்­ளார்.