பூப்பந்து: வாகை சூடிய சிங்கை வீராங்கனைகள்

பூப்பந்து: வாகை சூடிய சிங்கை வீராங்கனைகள்

1 mins read

பேராக்: 'மலே­சிய அனைத்­து­ல­கச் சவால்' பூப்­பந்­துப் போட்­டி­யின் பெண்­கள் இரட்­டை­யர் பிரி­வில் விருதை வென்­றுள்­ள­னர் சிங்­கப்­பூ­ரின் ஜின் யூஜியா, கிறிஸ்­டல் வோங் இணை. பேராக் மாநி­லத்­தில் நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் இரு­வ­ரும் தாய்­லாந்­தின் ஒர்­னிச்சா ஜோங்­சாத்­த­போர்ன்­பார்ன், அட்­டித்­தாயா போவா­னொன் இணையை 21-12, 21-15 எனும் ஆட்­டக்­க­ணக்­கில் வென்­ற­னர்.

"இந்த ஆண்டை மகிழ்ச்சி தரும் நிகழ்வுடன் முடிக்க நாங்­கள் மிகுந்த ஆனந்­த­மடை­கி­றோம். ஆண்டு முழு­வ­தும் மேடு பள்­ளங்­களை எதிர்­கொண்­டோம். இந்த வெற்றி எளி­தில் வர­வில்லை," என்­றார் 25 வயது ஜின்.

"ஆட்­டத்­திற்­கான தெளி­வான உத்­தி­யு­டன் தன்­னம்­பிக்­கை­யோடு கள­மி­றங்­கி­னோம். ஆட்­டத்தை எங்­க­ளுக்கு ஏற்­ற­வாறு வழி­ந­டத்தி கட்­டுக்­குள் வைத்­துக்­கொண்­டோம்," என்று 23 வயது வோங் குறிப்­பிட்­டார். இவர்களுக்கான பரிசுத் தொகை 25,000 டாலர் (34,000 வெள்ளி).