லண்டன்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள விம்பிள்டன் பொதுவிருது டென்னிஸ் போட்டியில் டேனீல் மெட்வெடெவ், ஆண்ட்ரே ருப்லெவ் போன்ற ரஷ்ய வீரர்களை மீண்டும் களமிறக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் பிரிட்டிஷ் வீரர் கேமரன் நோரி. உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்கள் போட்டியில் பங்கேற்கவேண்டும் எனத் தான் கருதுவதாக நோரி குறிப்பிட்டார்.
உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து அதன் விளையாட்டாளர்களுக்கும் பங்காளி நாடான பெலரூசின் வீரர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

