லண்டன்: யூரோ 2024 காற்பந்துப் போட்டி முடியும் வரை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக இருக்க கேரத் சவுத்கேட் திட்டமிட்டுள்ளதாக பிரிட்டனின் பல ஊடகங்கள் ெதிரவித்துள்ளன. கிறிஸ்மஸ் திருநாளுக்கு முன்பு 52 வயது சவுத்கேட் இந்த முடிவை இங்கிலாந்து காற்பந்துச் சங்கத்திடம் தெரியப்படுத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகக் கடைசி நிலவரப்படி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தொடர்புகொண்டபோது இங்கிலாந்து காற்பந்துச் சங்கம் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
சவுத்கேட்டின் தலைமையில் சென்ற உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து இவ்வாண்டின் போட்டியில் காலிறுதிச் சுற்றைத் தாண்டத் தவறியது.

