மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் 'ஏ-லீக்' காற்பந்து லீக் ஆட்டம் ஒன்றில் ரசிகர்கள் அத்துமீறி திடலுக்குள் நுழைந்து கோல் காப்பாளர் ஒருவரைத் தாக்கினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து கடுமையான தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய காற்பந்துச் சங்கத் தலைவர் ஜேம்ஸ் ஜான்சன் தெிரிவித்தார்.
எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்த ஆண்டின் பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி அந்நாட்டில் பாதுகாப்பாக நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார். 2023ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கிண்ணப் போட்டியை ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து ஏற்று நடத்துிகின்றன.
மெல்பர்ன் விக்டரி, மெல்பர்ன் சிட்டி ஆகிய குழுக்கள் நேற்று முன்தினம் மோதிய ஆட்டத்தில் சுமார் 150 ரசிகர்கள் திடலுக்குள் நுழைந்து மெல்பர்ன் சிட்டி கோல் காப்பாளர் டாம் குளோவரின் தலையில் மண்ணால் நிரப்பப்பட்ட உலோக வாளியால் தாக்கினர். குளோவரின் தலையில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. அவற்றைத் தைக்கவேண்டிய நிலை உருவானது.
இச்சம்பவத்தையடுத்து ஆட்டம் பாதி வழியில் ரத்து செய்யப்பட்டது.

