நட்சத்திரங்களை ஏலம் எடுத்த சென்னை அணி

நட்சத்திரங்களை ஏலம் எடுத்த சென்னை அணி

2 mins read
e2c81a5c-413e-485b-bcef-667f76cb18a6
-
multi-img1 of 2

கொச்சி: 16வது ஐபி­எல் டி20 கிரிக்­கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்­ரல்-மே மாதங்­களில் நடை­பெ­று­கிறது. இதற்­குத் தயா­ரா­கும் வகை­யில் பத்து அணி­கள் மொத்­தம் 163 வீரர்­களை தக்­க­வைத்­துக் கொண்­டன. 85 வீரர்­கள் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், விடு­விக்­கப்­பட்ட வீரர்­க­ளுக்­கு­ரிய இடத்தை நிரப்­பு­வ­தற்­காக ஐபி­எல் வீரர்­க­ளுக்­கான ஏலம் கேரள மாநி­லம் கொச்­சி­யில் உள்ள நட்­சத்­திர ஹோட்­ட­லில் நடை­பெற்­றது.

கொச்­சி­யில் நடை­பெற்ற ஐபி­எல் ஏலத்­தில் பத்து அணி­கள் ரூ.167 கோடி செலவு செய்து 29 வெளி­நாட்டு வீரர்­கள் உள்­பட 80 வீரர்­களை ஏலத்­தில் எடுத்­தன. இந்த ஏலத்­தில் சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி எடுத்த முதல் வீரர் ரகானே ஆவார்.

இந்­திய நட்­சத்­திர வீரர் ரகா­னேயை அடிப்­படை தொகை­யான ரூ.50 லட்­சத்­திற்கு சென்னை அணி ஏலத்­தில் எடுத்­துள்­ளது. கடந்த தொட­ரில் இவர் கோல்­கத்தா அணிக்­காக விளை­யா­டி­னார்.

இங்­கி­லாந்­தின் நட்­சத்­திர வீர­ரான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை அணி ஏலத்­தில் எடுத்­தது.

ஆந்­தி­ரா­வைச் சேர்ந்த 18 வயது ஷேக் ரஷீத்தை அடிப்­படை விலை­யான ரூ.20 லட்­சத்­திற்கு, சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி ஏலத்­தில் எடுத்­தது.

ஹரி­யா­னா­வைச் சேர்ந்த நிஷாந்த் சிந்து 19 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான உல­கக் கிண்­ணத் தொடரை வென்ற இந்­திய அணி­யில் இடம்­பெற்று இருந்­தார்.

இவரை ரூ.60 லட்­சத்­திற்கு சென்னை அணி ஏலத்­தில் எடுத்­தது.

நியூ­சி­லாந்­தைச் சேர்ந்த வேகப்­பந்து வீச்­சா­ள­ரான கைல் ஜேமி­சனை அடிப்­படை தொகை­யான ரூ.1 கோடிக்கு சென்னை அணி ஏலத்­தில் எடுத்­துள்­ளது.

சத்­தீஸ்­க­ரைச் சேர்ந்த ஆல்-ரவுண்­ட­ரான அஜய் மண்­டல் என்­ப­வ­ரை­யும் ஹைத­ரா­பாத்­தைச் சேர்ந்த பகத் வர்­மா­வை­யும் ரூ.20 லட்­சத்­திற்கு சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி ஏலத்­தில் எடுத்­தது. சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி­யில் இடம்­பி­டித்­துள்ள வீரர்­க­ளின் விவ­ரம் வரு­மாறு: எம்.எஸ்.டோனி, டேவான் கான்வே, ருது­ராஜ், ராயுடு, சேனா­பதி, மொயின் அலி, ஷிவம் துபே, ஹங்­கர்­கே­கர், பிரிட்­டோ­ரி­யஸ், சான்ட்­னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்­தி­ரனா, சிமர்­ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்­சனா, ஸ்டோக்ஸ், ரகானே, ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜமீ­சன், அஜய் மண்டல், பகத் வர்மா