மிர்பூர்: இந்தியா, பங்ளாதேஷ் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது.
முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் 73.5 ஓவர்களில் 227 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்து, முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. இரண்டாவது நாள் ஆட்டம் புஜாராவும் விராத் கோஹ்லியும் தலா 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ரிஷப் பன்ட் 93 ஓட்டங்களிலும் ஷ்ரேயாஸ் ஐயர் 87 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 301 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், புஜாரா நேற்று 12வது ஓட்டத்தை எடுத்தபோது டெஸ்ட் அரங்கில் 7,000 ஓட்டங்கள் கடந்த வீரர்களில் பிராட்மனை முந்தினார்.
பிராட்மன் 6,996 ஓட்டங்கள் எடுத்துள்ளார். மேலும் 7,000 ஓட்டங்கள் கடந்த ஏழாவது இந்திய வீரர் புஜாரா என்பது குறிப்பிடத்தக்கது.
புஜாரா இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 7,008 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

