அரையிறுதிச் சுற்றை நெருங்கும் சிங்கப்பூர்

அரையிறுதிச் சுற்றை நெருங்கும் சிங்கப்பூர்

1 mins read

கோலா­லம்­பூ­ரின் புக்­கிட் ஜலீல் விளை­யாட்­ட­ரங்­கில் நாளை மறு­நாள் செவ்­வாய்க்­கி­ழமை நடக்­க­வி­ருக்­கும் மலே­சி­யா­விற்கு எதி­ரான ஆட்­டத்­தில் சம­நிலை கண்­டாலே போதும், சிங்­கப்­பூர்க் குழு ஆசி­யான் காற்­பந்­துக் கூட்­ட­மைப்பு வெற்­றி­யா­ளர் போட்­டி­களின் அரை­யி­று­திச் சுற்­றுக்­குள் நுழைந்­து­வி­டும்.

கிண்­ணம் வெல்­லும் அணி­யாக எதிர்­பார்க்­கப்­படும் வியட்­னா­மிற்கு எதி­ராக நேற்று முன்­தி­னம் சிங்­கப்­பூர் மோதிய ஆட்­டம் 0-0 என்று கோலே­து­மின்­றிச் சம­நி­லை­யில் முடிந்­தது.

இத­னை­ய­டுத்து, மொத்­தம் பத்து அணி­கள் இரு பிரி­வு­க­ளாக மோதும் இப்­போட்­டித் தொட­ரில் சிங்­கப்­பூர் ஏழு புள்­ளி­க­ளு­டன் `பி' பிரி­வில் இரண்­டா­மி­டத்­தில் உள்­ளது.

அரை­யி­றுதி வாய்ப்பு கைக்­கெட்­டும் தொலை­வில் இருந்­தா­லும் முக்­கிய ஆட்­டக்­கா­ர­ரான இல்­ஹான் ஃபாண்டி, வியட்­னா­மிற்கு எதி­ரான ஆட்­டத்­தில் காய­ம­டைந்து வெளி­யே­றி­யது சிங்­கப்­பூ­ருக்­குப் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஆனா­லும், வேறு நல்ல ஆட்­டக்­கா­ரர்­களும் அணி­யில் இருப்­ப­தால் தங்­க­ளால் சமா­ளிக்க முடி­யும் என்று நம்­பிக்­கை­யு­டன் கூறி­னார் இல்­ஹா­னின் சகோ­த­ர­ரும் ஆட்ட நாய­கன் விருது வென்­ற­வரு­மான இர்­ஃபான் ஃபாண்டி.

ஆட்­டத்­தில் வெற்­றி­பெற விரும்­பி­ய­தால் இது சிறந்த முடி­வன்று என்று கூறிய சிங்­கப்­பூர் பயிற்­று­விப்­பா­ளர் டக்­க­யுக்கி நிஷி­கயா, ஆயி­னும் ஒரு புள்ளி கிடைத்­தது சாத­க­மான அம்­சமே என்­றும் சொன்­னார்.

"தனித்­த­னி­யா­க­வும் குழு அள­வி­லும் வியட்­னாம் வலிமை மிக்க அணி. ஆனா­லும், நாங்­கள் அவர்­க­ளைத் திற­மை­யாக எதிர்­கொண்­டோம்," என்­றார் அவர்.

இரு அணி­களும் மோதிய கடைசி 14 போட்­டி­களில் சிங்­கப்­பூர் வென்­றதே இல்லை.