தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தியபோதும் அந்தப் போட்டியில் ஒரு புள்ளிகூட பெறாமல் அவமானத்துடன் முதல் சுற்றிலேயே வெளியேறியது கத்தார். இதனையடுத்து, அக்குழுவின் பயிற்றுநரான ஃபெலிக்ஸ் சான்செஸின் ஒப்பந்தத்தை நீட்டிப்பது இல்லை என்று கத்தார் காற்பந்துச் சங்கம் முடிவு செய்துள்ளது. ஸ்பெயின் நாட்டவரான சான்செஸின் ஒப்பந்தம் நேற்றுடன் முடிவிற்கு வந்தது. கடந்த 2017ஆம் ஆண்டில் கத்தார் பயிற்றுநராக சான்செஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2019ல் அக்குழு ஆசியக் கிண்ணத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
பயிற்றுவிப்பாளரை விடுவித்த கத்தார்
1 mins read

