யங் லயன்ஸ் குழுவில் வெளிநாட்டு வீரர்கள்

1 mins read
ce952394-22d5-453c-9d80-6ec5518f410f
"ஜப்­பா­னைச் சேர்ந்த ஜுன் கொபா­யாஷி, கன் கொபா­யாஷி இரு­வ­ரும் யங் லயன்ஸ் குழு­வி­ன­ரு­டன் கடந்த வாரம் பயிற்­சி­யில் ஈடு­பட்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது." படம்: பிக்ஸாபே -

ஏழு ஆண்­டு­களில் முதன்­மு­றை­யாக சிங்­கப்­பூர் பிரி­மி­யர் லீக் காற்பந்துக் குழு­வான யங் லயன்­சில் வெளி­நாட்டு விளை­யாட்­டா­ளர்­கள் இடம்­பெ­ற­வுள்­ள­னர். ஜப்­பா­னைச் சேர்ந்த ஜுன் கொபா­யாஷி, கன் கொபா­யாஷி இரு­வ­ரும் யங் லயன்ஸ் குழு­வி­ன­ரு­டன் கடந்த வாரம் பயிற்­சி­யில் ஈடு­பட்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது. இவர்­கள் சென்ற ஆண்டு சிங்­கப்­பூர் பிரி­மி­யர் லீக் கிண்­ணத்தை வென்ற அல்­பி­ரெக்ஸ் நிகாட்டா குழு­வில் முக்­கி­யப் பங்கு வகித்­த­வர்­கள்.

மார்ச் மாதம் தொடங்­க­வுள்ள புதிய சிங்­கப்­பூர் பிரி­மி­யர் லீக் பரு­வத்­தில் இவ்­விரு விளை­யாட்­டா­ளர்­களும் யங் லயன்­சுக்­குக் கள­மி­றங்­கு­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

குழு­வில் இன்­னொரு வெளி­நாட்டு வீர­ரும் சேரக்­கூ­டும். அவர் ஐரோப்­பா­வைச் சேர்ந்த தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ர­ராக இருக்­க­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­காப்பு வீர­ரான ஜுன், சென்ற பரு­வத்­தில் அல்­பி­ரெக்ஸ் குழு­வின் அணித் தலை­வ­ராக இருந்­தார். கன், 26 ஆட்­டங்­களில் ஐந்து கோல்­க­ளைப் போட்டு ஏழு கோல்­களை உரு­வாக்­கி­னார்.

பெரி­தும் சிர­மப்­படும் யங் லயன்சை இரு­வ­ரும் மீட்டெடுப்பர் என்­பது நம்­பிக்கை.