15 புள்ளிகள் இழந்து தவிக்கும் யுவெண்டஸ்

15 புள்ளிகள் இழந்து தவிக்கும் யுவெண்டஸ்

2 mins read
74f95017-372c-4aa2-aa64-6b4104978067
15 புள்­ளி­கள் இழந்­ததை அடுத்து, லீக் பட்­டி­ய­லில் மூன்­றா­வது இடத்­தில் இருந்த யுவெண்­டஸ் பத்­தா­வது இடத்­துக்­குச் சரிந்­து­விட்­டது. படம்: ஏஎஃப்பி -

டுரின்: இத்­தா­லிய காற்­பந்து லீக் ஜாம்­ப­வா­னான யுவெண்­டஸ் குழு­வுக்கு இவ்­வாண்டு ஆரம்பித்த

­தி­லி­ருந்து சோத­னைக் காலம் தொடங்­கி­விட்­டது.

தற்­போது சோத­னைக் காலத்­தின் உச்­சகட்­ட­மாக அத­னி­ட­மி­ருந்து 15 புள்­ளி­கள் பறிக்­கப்­பட்­டுள்­ளன.

போலி கணக்­கு­க­ளைச் சமர்ப்­பித்­த­தற்­காக யுவெண்­ட­சுக்கு எதி­ராக இத்­தா­லிய காற்­பந்­துச் சம்­மே­ள­னம் இந்த நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளது.

15 புள்­ளி­கள் இழந்­ததை அடுத்து, லீக் பட்­டி­ய­லில் மூன்­றா­வது இடத்­தில் இருந்த யுவெண்­டஸ் பத்­தா­வது இடத்­துக்­குச் சரிந்­து­விட்­டது.

இத­னால் அடுத்த பரு­வத்­தில் அக்­கு­ழு­வால் சாம்­பி­யன்ஸ் லீக் போட்­டிக்­குத் தகுதி பெற முடி­யுமா என்ற சந்­தே­கம் எழுந்­துள்­ளது.

யுவெண்­டஸ் குழு­வி­ட­மி­ருந்து ஒன்­பது புள்­ளி­கள் மட்­டுமே கழிக்­கப்­பட வேண்­டும் என்று இத்­தா­லிய அரசு வழக்­க­றி­ஞர்­கள் முத­லில் கேட்­டுக்­கொண்­ட­னர்.

ஆனால் பிறகு 15 புள்­ளி­க­ளைக் கழிக்க சங்­கம் முடி­வெ­டுத்­தது.

இதற்­கி­டையே, எந்த ஒரு விதி­மீ­ற­லி­லும் ஈடு­ப­ட­வில்லை என்று யுவெண்­டஸ் வாதிட்டு வரு­கிறது.

தண்­ட­னையை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்ய யுவெண்­டஸ் திட்­ட­மிட்­டுள்­ளது.

ஐரோப்­பா­வின் ஆக உய­ரிய, விலை­ம­திப்­புள்ள காற்­பந்து

போட்­டி­யான சாம்­பி­யன்ஸ் லீக் போட்­டி­யில் கள­மி­றங்க முடி­யாத நிலை ஏற்­பட்­டால், ஏற்­கெ­னவே கடந்த பரு­வத்­தில் 239 மில்­லி­யன் பவுண்டு இழப்­பால் பாதிக்­கப்­பட்­டுள்ள யுவெண்­ட­சுக்கு அது பேரி­டி­யாக அமைந்­து­வி­டும்.

15 புள்­ளி­கள் பறிக்­கப்­பட்­டது மட்­டு­மல்­லாது, யுவெண்­ட­சின் தற்­போ­தைய இயக்­கு­நர் ஃபெடரிக்கோ செரு­பி­னிக்கு 16 மாத தடை­யும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

செரு­பி­னி­யின் தடையை எதிர்த்­தும் மேல்­மு­றை­யீடு செய்­யப்­போ­வ­தாக யுவெண்­டஸ் தெரி­வித்­தது.

யுவெண்­ட­சின் முன்­னாள்­

த­லை­வர் ஆண்ட்­ரிய அக்­னே­லிக்­கும் முன்­னாள் தலைமை நிர்­வாகி மௌரி­சியோ அரி­வா­பெ­னிக்­கும் இரண்டு ஆண்­டு­கள் தடை­யும் முன்­னாள் இயக்­கு­நர் ஃபேபியோ பரா­டி­சிக்கு 30 மாத தடை­யும் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

பர­டிசி தற்­போது டோட்­டன்­ஹம் ஹாட்­ஸ­பர் குழு­வில் உள்­ளார்.

இந்­நி­லை­யில், தண்­டனை மற்­றும் தடை­களை எதிர்­நோக்­கிய மேலும் எட்டு குழுக்­க­ளுக்கு எதி­ரான வழக்­கு­கள் தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளன.

இது நியா­ய­மற்­றது என்று யுவெண்­டஸ் அதி­ருப்­திக் குரல் எழுப்­பி­யுள்­ளது.