மெல்பர்ன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டி இம்மாதம் 16ஆம் தேதி மெல்பர்னில் தொடங்கியது.
இம்மாதம் 29ஆம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கோர்டா 7-6, 6-3, 7-6 எனும் புள்ளிகளில் மெட்வடேவை வீழ்த்தி நான்
காவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஏற்கனவே முன்னணி வீரர்
களான ரஃபயேல் நடால், ஸ்வரேவ், கேஸ்பர் ரூட் ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறிவிட்டனர். போட்டியில் மிகக் கடுமையான போட்டி நிலவுவதால் யார் வாகை சூடுவார் என்பதை முன்னுரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

