பயணத்தைத் தொடரும் சிட்டி; வெளியேறியது ஆர்சனல்

பயணத்தைத் தொடரும் சிட்டி; வெளியேறியது ஆர்சனல்

2 mins read
b0070a4e-871b-4ebf-ae41-b13d4c06441b
-

லண்­டன்: இங்­கி­லிஷ் எ­ஃப்ஏ கிண்ண காற்­பந்­துப் போட்­டி­யின் ஐந்­தா­வது சுற்­றுக்கு மான்­செஸ்­டர் சிட்டி தகுதி பெற்­றுள்­ளது.

ஆர்­ச­ன­லுக்கு எதி­ராக நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்தை அது 1-0 எனும் கோல் கணத்­தில் கைப்­பற்­றி­யது. சிட்­டி­யின் வெற்றி கோலை நேதன் அக்கே போட்­டார். கோல் போட கிடைத்த வாய்ப்புகளைத் தமது குழு பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வில்லை என்று ஆர்­ச­ன­லின் நிர்­வாகி மிக்­கேல் ஆர்­டேட்டா அதி­ருப்தி தெரி­வித்­தார்.

"இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் போட்­டி­யில் பலம் பொருந்­திய பல குழுக்­களை ஆர்­ச­னல் இப்­

ப­ரு­வத்­தில் தோற்­க­டித்­துள்­ளது. கிடைத்த வாய்ப்­பு­களை நன்கு பயன்­ப­டுத்­தி­யதே வெற்­றிக்­குக் கார­ண­மாக அமைந்தது. ஆனால் சிட்­டிக்கு எதி­ரான ஆட்­டத்­தில் ஆர்­ச­னல் ஆட்­டக்­கா­ரர்­கள் வாய்ப்­பு­களை நழு­வ­விட்­ட­னர்," என்­றார் ஆர்டேட்டா.

இந்நிலையில், நான்காவது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்­ற­போ­தி­லும் சிட்­டி­யின் செயல்­

பா­டும் எதிர்­பார்த்த அள­வுக்கு இல்லை. அதன் நட்­சத்­திர வீரர் எர்­லிங் ஹாலண்ட் கோல் போடாத­படி ஆர்­ச­ன­லின் தற்காப்பு அரண் பார்த்­துக்­கொண்­டது.

ஒரு கட்டத்தில் ஆட்­டம் கோல் ஏது­மின்றி சம­நி­லை­யில் முடி­யக்கூடும் என்று தோன்றியது.

ஆட்டம் முடிய 26 நிமி­டங்­கள் எஞ்­சி­யி­ருந்­த­போது மாற்று ஆட்­டக்­கா­ர­ராக சிட்­டி­யின் ஜுலி­யன் ஆல்­வ­ரேஸ் கள­மி­றங்­கி ­னார்.

அவ­ரது வரு­கை ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

ஆல்­வ­ரேஸ் அனுப்­பிய பந்து ஆர்­ச­ன­லின் கோல் கம்­பம் மீது பட்டு ஜேக் கிரீ­லி­ஷி­டம் சென்­றது. அவர் அக்­கே­யி­டம் பந்தை அனுப்ப, பந்து வலை­யைத் தொட்­டது.

அத­னைத் தொடர்ந்து, ஆர்­ச­ன­லால் இறுதி வரை ஆட்­டத்­தைச் சமன் செய்ய முடி­யா­மல் போன­தால் சிட்டி வெற்றி பெற்­றது. எ­ஃப்ஏ கிண்­ணப் போட்­டி­யி­லி­ருந்து ஆர்­ச­னல் வெளி­யே­றி­யது.