பந்துவீச்சு மோசமாக இருந்தது: பாண்டியா

பந்துவீச்சு மோசமாக இருந்தது: பாண்டியா

2 mins read

ராஞ்சி: மோச­மான பந்­து­வீச்சே நியூ­சி­லாந்­துக்கு எதி­ரான கிரிக்­கெட் ஆட்­டத்­தில் இந்­தியா தோல்வி அடைந்­த­தற்கு கார­ணம் என்று அதன் அணித் தலை­வர் ஹர்­திக் பாண்­டியா கூறி­யுள்­ளார்.

"இந்த ஆடு­க­ளத்தை கணிக்கத் தவ­றி­விட்­டோம். ஆடு­க­ளம் இப்­படி இருக்­கும் என்று யாரும் நினைக்­க­வில்லை.

"ஆனால் எங்­க­ளை­விட நியூ­சி­லாந்து அணி சிறப்­பாக செயல்­பட்­டது. அத­னால்தான் அவர்­களுக்கு வெற்றி கிடைத்­தது. சுழற்­பந்து வீச்சு திரும்­பிய வித­மும் ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

"பந்­த­டிக்கத் தொடங்கும் வரை இலக்கை எட்டிவிட­லாம் என்று நினைத்­தோம். ஆனால் கடைசிக் கட்­டத்­தில் பந்­து­வீச்­சில் மிக­வும் மோச­மாக செயல்­பட்டு, கூடு­த­லாக 25 ஓட்­டங்­கள் விட்­டுக்­கொ­டுத்துவிட்­டோம். அதுவே தோல்­விக்கு முக்­கிய கார­ண­மாக அமைந்­தது.

"வாஷிங்­டன் சுந்­தர் நன்­றாக செயல்­பட்­டார். அவர் நன்­றாக பந்­த­டிக்­கி­றார், பந்­தும் வீசு­கி­றார். இது அணிக்கு உத­வும்," என்­றார் பாண்­டியா.

ராஞ்­சி­யில் நடந்த இந்த ஆட்­டத்­தில் முத­லில் ஆடிய நியூ­சி­லாந்து அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவ­ரில் 6 விக்­கெட் இழப்­புக்கு 176 ஓட்­டங்­கள் எடுத்­தது. இத­னால் இந்­தி­யா­வுக்கு 177 ஓட்­டங்­கள் இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

வாஷிங்­டன் சுந்­தர் 2 விக்­கெட்­டும், அர்­தீப் சிங், குல்­தீப் யாதவ், ஷிவம் மாவி தலா 1 விக்­கெட்­டும் கைப்­பற்­றி­னார்­கள்.

பின்­னர் ஆடிய இந்­திய அணி 20 ஓவ­ரில் 9 விக்­கெட் இழப்­புக்கு 155 ஓட்டங்கள் எடுத்­தது. இத­னால் இந்­தியா 21 ஓட்டங்களில் தோல்­வியைத் தழு­வி­யது.

இந்த வெற்­றி­யின் மூலம் 3 போட்­டி­கள் கொண்ட 20 ஓவர் தொட­ரில் நியூ­சி­லாந்து 1-0 என்ற கணக்­கில் முன்­னி­லை­யில் உள்­ளது. 2வது 20 ஓவர் போட்டி லக்னோவில் இன்று நடை­பெ­ற­உள்­ளது.