உருகுவே காற்பந்து வீரர்களுக்கு தற்காலிகத் தடை

உருகுவே காற்பந்து வீரர்களுக்கு தற்காலிகத் தடை

1 mins read

லசாஞ்சே: உரு­குவே காற்­பந்து அணி­யின் நான்கு வீரர்­க­ளுக்கு அனைத்­து­லக காற்­பந்துச் சம்­மே­ள­ன­மான ஃபிஃபா தற்­கா­லி­கத் தடை விதித்­துள்­ளது.

கடந்த டிசம்­ப­ரில் நடை­பெற்ற உல­கக் கிண்­ணப் போட்­டி­யின் முதல் சுற்று ஆட்­டத்­தின்­போது கானா­வு­டன் மோதிய உரு­குவே 2-0 என்ற கோல்கணக்­கில் வென்­றது.

மூன்று கோல்­கள் முன்­னி­லை­யில் வென்­றி­ருந்­தால், உரு­குவே அணிக்கு அடுத்த சுற்­றுக்கு முன்­னே­று­வ­தற்­கான வாய்ப்­பி­ருந்­தது. ஆனால், கடைசி ­வரை போரா­டிய உரு­குவே வீரர்­க­ளுக்­குப் பலன் கிட்­ட­வில்லை.

ஆட்ட முடி­வில் உரு­குவே வீரர்­கள் சிலர் நடு­வ­ரிடம் ஆவே­ச­மாக வாக்­கு­வா­தம் செய்­த­னர்.

இந்­நி­லை­யில், ஜோசே மரி­யா­விற்­கும் கோல்­காப்­பா­ளர் ஃபெர்னான்டோ மஸ்­லே­ரா­வுக்­கும் நான்கு ஆட்­டங்­கள் தடை­யும் 20,000 சுவிஸ் ஃபிராங்க் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

எடின்­சன் கவானி, டியேகோ கோடி­னுக்கு ஓர் ஆட்­டம் தடை­யும் 15,000 சுவிஸ் ஃபிராங்க் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டுள்­ளன. சமூக சேவை செய்­ய­வும் இவர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், உருகுவே காற்பந்துச் சம்மேளனத்திற்கு 50,000 சுவிஸ் ஃபிராங்க் (S$70,248) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.