கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா வெற்றி

கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா வெற்றி

1 mins read

கேப்­ட­வுன்: இங்­கி­லாந்­துக்கு எதி­ரான முதல் ஒரு­நாள் கிரிக்­கெட் போட்­டியை 27 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் வென்­றது தென்­னாப்­பி­ரிக்கா.

சொந்த மண்ணில் முத­லில் பந்­த­டித்த தென்­னாப்­பி­ரிக்கா

50 ஓவ­ரில் 7 விக்­கெட்­டுக்கு

298 ஓட்­டங்­கள் எடுத்­தது. இதை­ய­டுத்து, 299 ஓட்­டங்­கள் எடுத்­தால் வெற்றி என்ற இலக்­கு­டன் இங்­கி­லாந்து கள­மி­றங்­கி­யது.

தொடக்க ஆட்­டக்­கா­ரர் ஜேசன் ராய் பொறுப்­பு­டன் ஆடி சத­டிடித்­தார். அவர் 113 ஓட்­டங்­களில் ஆட்­ட­மி­ழந்­தார். டேவிட் மலான் 59 ஓட்­டங்­க­ளுக்கு வெளி­யே­றி­னார். மற்­ற­வர்­கள் நிலைத்து நிற்­க­வில்லை. இறு­தி­யில், இங்­கி­லாந்து 271 ஓட்­டங்­க­ளுக்கு அனைத்து விக்­கெட்­டு­க­ளை­யும் இழந்­தது.

இந்த வெற்­றி­யின் மூலம்

3 போட்­டி­கள் கொண்ட ஒரு­நாள் தொட­ரில் தென்­னாப்­பி­ரிக்கா 1-0 என முன்­னிலை பெற்­றுள்­ளது.