தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்: 'கில்லி'யாக மாறிய கில்

1 mins read
0c2c9e8e-b962-45a9-b581-18aeb9230137
அனைத்துலக டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார். (படம்: ஏஎஃப்பி) -

இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது டி20 ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் விளாசிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி ஆகிய இந்திய வீரர்கள் அந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அனைத்துலக டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை குவித்த பந்தடிப்பாளர் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 63 பந்துகளில் 126 ஓட்டங்களை அவர் விளாசினார்.

அனைத்துலக டி20 போட்டிகளில் சதம் அடித்த ஏழாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.

ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், விராத் கோஹ்லி ஆகிய இந்திய வீரர்கள் டி20 போட்டிகளில் சதம் அடித்துள்ளனர்.