செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
76e15959-25ef-448c-af99-c270ea215186
-

அஃப்ரிடி மகளை மணந்த அஃப்ரிடி

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடி, 22, அவ்வணியின் முன்னாள் தலைவர் ஷாகித் அஃப்ரிடியின் மகள் அன்ஷாவை மணந்துகொண்டார். அவர்களது திருமணம் கராச்சி நகரில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அணித்தலைவர் பாபர் ஆசம், சர்ஃபராஸ் கான், ஷதாப் கான், நஷீம் ஷா உள்ளிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கடந்த சில மாதங்களாக முழங்கால் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியில் ஷகீன் ஷா அஃப்ரிடி இடம்பெறவில்லை. இந்த நிலையில், இம்மாதம் 13ஆம் தேதி பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் தொடங்க இருப்பதால், அதற்குள் முழுமையாக உடல்நலம் தேறி உடற்தகுதி பெறக் கடுமையாக முயன்று வருகிறார். அதனால் திருமணத்திற்கு முதல் நாளன்றும் அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

ஊக்கமருந்து: இந்திய சீருடற்பயிற்சி வீராங்கனைக்கு 21 மாதங்கள் தடை

புதுடெல்லி: ஊக்கமருந்துச் சோதனையில் தோல்வி அடைந்ததால், இந்திய சீருடற்பயிற்சி நட்சத்திரம் தீபா கர்மாகர் (படம்) போட்டிகளில் பங்கேற்க

21 மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இவரிடம் பரிசோதனை மாதிரி சேகரிக்கப்பட்ட நாளான 2021 அக்டோபர் 11ஆம் தேதியிலிருந்து தடைக்காலம் கணக்கில் கொள்ளப்படுவதால் இவ்வாண்டு ஜூலை 10ஆம் தேதியுடன் இவருக்கான தடைக்காலம் முடிவடையும். கடந்த 2016ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தீபா கர்மாகர் நான்காமிடம் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.