இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

2 mins read
dcb7b1f5-ad6b-4037-9d40-7c0e82491e6f
-

அஸ்வின் சுழலில் மளமளவென சரிந்த ஆஸ்திரேலிய விக்கெட்டுகள்

நா­க்­பூர்: ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் அணிக்கு எதி­ரான முதல் டெஸ்ட் போட்­டி­யில் இந்­திய அணி இன்­னிங்ஸ் மற்­றும் 132 ஓட்­டங்­கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்­தி­யா­ சென்றுள்ள ஆஸ்­தி­ரே­லிய அணி, 4 டெஸ்ட் போட்­டி­கள், 3 ஒரு­நாள் ஆட்­டங்­களில் விளை­யா­டு­கிறது.

நாக்பூரில் சென்ற வியா­ழக்­கிழமை தொடங்­கிய முதல் டெஸ்ட் போட்­டி­யில் பூவா தலையா வென்ற ஆஸ்­தி­ரே­லிய அணி பந்­த­டிக்க முடிவு செய்­தது.

ஆஸ்­தி­ரே­லிய அணி முதல் இன்­னிங்­சில் 63.5 ஓவர்­களில் 177 ஓட்­டங்­க­ளுக்கு அனைத்து விக்­கெட்­டு­க­ளை­யும் இழந்­தது.

பிறகு முதல் இன்­னிங்சைத் தொடங்­கிய இந்­திய அணி 2வது நாள் முடி­வில் 114 ஓவர்­களில் 7 விக்­கெட்டுகள் இழப்­புக்கு 321 ஓட்­டங்­கள் எடுத்­தது. இந்­திய அணிக்கு 3 விக்­கெட்­டு­கள் மீத­மி­ருந்த நிலை­யில் 144 ஓட்­டங்­கள் முன்­னிலை பெற்­றி­ருந்­தது.

நேற்றைய மூன்­றா­வது நாளும் இந்­திய வீரர்­கள் அதி­ரடி காட்­ட, முதல் இன்­னிங்­சிற்கு 139.3 ஓவர்­களில் 400 ஓட்டங்கள் எடுத்து, 223 ஓட்டங்கள் முன்­னிலை பெற்­றது.

அதிக ஓட்­டங்­கள் பின்­தங்­கி­ இ­ருந்­த­தால் நெருக்­க­டி­யான சூழ­லில் இந்­தி­யப் பந்­து­வீச்சை எதிர்­கொண்ட ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் விக்­கெட்­டு­களை மள­ம­ள­வென சரித்­தார் இந்­தி­யா­வின் அஸ்­வின்.

கவாஜா, வார்­னர், ரென்ஷா, ஹேண்ட்ஸ்­கோம்ப், அலெக்ஸ் கேரி ஆகி­யோர் அஸ்­வின் பந்­து­வீச்­சில் வீழ்ந்­தார்­கள். அஸ்­வினுக்குக் கிடைத்த ஐந்து விக்­கெட்­டு­களில் நான்கு எல்­பி­ட­பிள்யூ மூலம் கிடைத்­தன.

அஸ்­வின் 5 விக்­கெட்­டு­க­ளை­யும் ஜடேஜா, ஷமி தலா 2 விக்­கெட்­டு­க­ளை­யும் அக்­‌ஷர் பட்டேல் ஒரு விக்­கெட்­டை­யும் வீழ்த்தினர்.

இறு­தி­யில், ஆஸ்­தி­ரே­லிய அணி 32.3 ஓவர்­களில்

91 ஓட்­டங்­க­ளுக்கு அனைத்து

விக்­கெட்­டு­க­ளை­யும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது.