நிரபராதி என்பது நிரூபிக்கப்படும்: கார்டியோலா

நிரபராதி என்பது நிரூபிக்கப்படும்: கார்டியோலா

1 mins read

மான்­செஸ்­டர்: தாங்­கள் எந்த தவ­றும் செய்­ய­வில்லை என்­பது நிரூ­பிக்­கப்­படும் என பிரி­மி­யர் லீக்­கின் முன்­னணி காற்­பந்­துக் குழு­வான மான்­செஸ்­டர் சிட்­டி­ நிர்­வாகி பெப் கார்­டி­யோலா கூறி­யுள்­ளார்.

2009-2018ஆம் ஆண்­டிற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் இபி­எல் தொட­ரின் நிதி விதி­மு­றை­களை மீறி­ய­தாக சிட்டி குழு­மீது சென்ற திங்­கட்­கி­ழ­மை­யன்று இபி­எல் நிர்­வா­கக் குழு 100க்கும் மேற்­பட்ட குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

இது­பற்றி கிட்­டத்­தட்ட ஒரு வாரத்­திற்­குப் பிறகு கருத்து தெரி­வித்த அதன் நிர்­வாகி கார்­டி­யோலா, "ஐரோப்­பிய கிண்­ணத் தொட­ரில் நடந்தது போலவே இப்­போ­தும் நடக்­கிறது.

"ஆனால், அங்கு நாங்­கள் எந்­தக் குற்­ற­மும் செய்­ய­வில்லை என்­பதை நிரூ­பித்­தோம்.

"அதே­தான் இப்­போ­தும் நடக்­கிறது. எங்­க­ளது தரப்பு வாதத்தை முன்­வைக்க வாய்ப்­ப­ளிக்­கா­மல், பிரி­மி­யர் லீக்­கில் உள்ள 19 குழுக்­களும் எங்­கள்­மீது குற்­றம் சுமத்து­கின்­றன.

"நாங்­கள் நிர­ப­ராதி என்­பது கண்­டிப்­பாக நிரூபிக்­கப்­படும்," என்­றார்.

சிட்டி குழு நிதி விதி­மு­றை­களை மீறி­ய­தாக சென்ற 2020ல் தீர்ப்­ப­ளித்த ஐரோப்­பிய காற்­பந்து நிர்­வா­கக் குழு, சிட்­டிக்கு இரண்டு ஆண்­டு­கள் தடை விதித்­தது.

பின்­னர், விளை­யாட்­டுக்­கான நடு­வர் நீதி­மன்­றத்­தால் சிட்­டி குழு மீதான அந்த தடை ரத்து செய்­யப்­பட்­டது.

சிட்டி மீதான குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால், அக்குழு­வில் இருந்து தான் வில­கு­வேன் என்று கார்­டி­யோலா முன்பு கூறி­யி­ருந்­தார். ஆனால், நேற்­றைய செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது, சிட்டி குழு­வில் தொடர்ந்து நீடிக்க விரும்­பு­வ­தா­க­வும் வில­கப்போவ­தில்லை என்­ப­தில் உறு­தி­யாக இருப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.