லண்டன்: நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் துருக்கி, சிரியா நாடுகளுக்கு ஒரு மில்லியன் பவுண்டு (S$1.6 மி.) நிதியுதவி வழங்கப்படுமென இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்து லீக் தெரிவித்துள்ளது. அத்துடன், இவ்வார இறுதியில் நடக்கும் ஆட்டங்களில் வீரர்களும் நடுவர்களும் கறுப்புப் பட்டை அணிந்து களமிறங்குவர். அதுபோல, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் லீக் ஆட்டங்களின்போதும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும். இதனிடையே, ஐரோப்பியக் காற்பந்துச் சங்க கூட்டமைப்பும் (யுயேஃபா) 200,000 யூரோ (S$282,100) நிதியுதவி வழங்கியுள்ளது.
நிலநடுக்கம்: பிரிமியர் லீக் $1.6 மி. நிதியுதவி
1 mins read

