17,000 ஓட்டம் எடுத்து சாதனை படைத்த ரோகித் சர்மா

17,000 ஓட்டம் எடுத்து சாதனை படைத்த ரோகித் சர்மா

1 mins read
095e0e5e-6219-47f1-8990-552b52372d21
-

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான நேற்­றைய ஆட்­டத்­தில் கள­மி­றங்­கிய இந்­திய கிரிக்­கெட் அணி­யின் தலை­வர் ரோகித் சர்மா (படம்), 35 ஓட்­டங்­கள் எடுத்த பிறகு அனைத்­து­ல­கக் கிரிக்­கெட் போட்­டி­களில் 17,000 ஓட்­டங்­கள் எடுத்த இந்­திய கிரிக்­கெட் ஆட்­டக்­கா­ரர்­கள் பட்­டி­ய­லில் இடம் பிடித்து சாதனை படைத்­தார்.

சச்­சின் டெண்­டுல்­கர், எம்­எஸ் தோனி, ராகுல் திரா­விட், சவ்­ரவ் குங்­குலி, விராத் கோஹ்லி உள்ளிட்ட ஆறு இந்­தி­யர்­கள் அனைத்­து­ல­கப் போட்­டி­களில் 17,000 ஓட்­டங்­கள் எடுத்­துள்­ள­னர். ஏழா­வது வீர­ராக அப்­பட்­டி­ய­லில் சேர்ந்­துள்ள சர்மா, 2007ல் அனைத்­து­ல­கப் போட்­டி­களில் களம் இறங்­கி­னார்.

இது­வரை அவர் 48 டெஸ்ட் ஆட்­டங்­களில் விளை­யாடி 3,348 ஓட்­டங்­க­ளை­யும் 241 ஒரு­நாள் போட்­டி­களில் 9,782 ஓட்­டங்­க­ளை­யும் 148 டி20 அனைத்­து­ல­கப் போட்­டி­களில் 3,853 ஓட்­டங்­ களை­யும் எடுத்­துள்­ளார்.

டி20 போட்டிகளில் நான்கு சதங்கள் எடுத்த ஒரே வீரரும் அவரே.