ராகுல் அபாரம்; இந்தியா வெற்றி

மும்பை: ஆஸ்­தி­ரே­லிய அணிக்கு எதி­ரான முதல் ஒரு­நாள் போட்­டி­யில் கே.எல்.ராகுல், ஜடே­ஜா­வின் நிதான ஆட்­டத்­தால் இந்­திய அணி வெற்றி பெற்­றது.

மூன்று போட்­டி­கள் கொண்ட இத்­தொ­ட­ரின் முதல் ஆட்­டம் நேற்று முன்­தி­னம் மும்பை வான்­கடே மைதா­னத்­தில் நடை­பெற்­றது.

பூவா தலையாவில் வென்ற இந்­திய அணித் தலை­வர் ஹர்த்­திக் பாண்­டியா பந்­து­வீச்­சைத் தேர்வு செய்­தார்.

முத­லில் பந்­த­டித்த ஆஸ்­தி­ரே­லியா, இந்­திய அணி­யின் அபார பந்­து­வீச்­சில் 188 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­தது.

இந்­தி­யா­வின் முக­மது ஷமி, முக­மது சிராஜ் தலா 3 விக்­கெட்­டு­க­ளைக் கைப்­பற்­றி­னர். ஆஸ்­தி­ரே­லிய அணி­யில் அதி­க­பட்­ச­மாக மிட்­செல் மார்ஷ் 81 ஓட்­டங்­கள் குவித்­தார்.

அடுத்து, 189 ஓட்­டங்­கள் எடுத்­தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி கள­மி­றங்­கி­யது இந்­திய அணி. ஆனால், அந்த அணி­யின் தொடக்க ஆட்­டக்­கா­ரர்­கள் அதிர்ச்சி அளித்­த­னர்.

இஷான் கிஷன் 3 ஓட்­டங்­க­ளிலும் விராத் கோஹ்லி 4 ஓட்­டங்­க­ளிலும் ஆட்­ட­மி­ழந்து ஏமாற்­ற­ம­ளித்­த­னர்.

தொடர்ந்து சூர்­ய­கு­மார் யாதவ் முதல் பந்­தி­லேயே ஆட்­ட­மி­ழந்து வெளி­யே­றி­னார். ஷுப்­மன் கில்­லும் நீண்ட நேரம் நிலைத்து ஆட­வில்லை. இத­னால், இந்­திய அணி 39 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­டு­களை இழந்து தடு­மா­றி­யது.

இந்த சூழ­லில் கே.எல்.ராகுல், பாண்­டியா இணைந்து விளை­யாடி அணியை சரி­வில் இருந்து மீட்க முயன்­ற­னர். பாண்­டியா 25 ஓட்­டங்­களில் ஆட்­ட­மி­ழந்­தார்.

அதன் பிறகு இணைந்த ரவீந்­திர ஜடேஜா, ராகு­லுக்கு உறு­து­ணை­யாக விக்­கெட்டை இழக்­கா­மல் சிறப்­பாக பந்­த­டித்­தார். இவர்­கள் 108 ஓட்­டங்­கள் குவித்­த­னர்.

கே.எல்.ராகுல் 75 ஓட்­டங்­க­ளு

­ட­னும் ரவீந்­திர ஜடேஜா 45 ஓட்டங்­க­ளு­ட­னும் களத்­தில் இருந்­த­னர்.

இதை­ய­டுத்து, 39.5 ஓவர்­களில் இலக்கை எட்­டிய இந்­திய அணி 5 விக்­கெட்­டு­கள் வித்­தி­யா­சத்­தில் ஆஸ்­தி­ரே­லி­யாவை வீழ்த்­தி­யது.

சிறப்­பாக விளை­யா­டிய கே.எல்.ராகுல் அரை­ச­தம் அடித்து அசத்­தி­னார். ஒரு­நாள் போட்­டி­களில் இது அவ­ரு­டைய 13வது அரை­

ச­த­மா­கும்.

2 விக்­கெட்­டு­கள் வீழ்த்தி, 45 ஓட்­டங்­கள் எடுத்து ஆட்­ட­மி­ழக்­கா­மல் இருந்த ரவீந்­திர ஜடேஜா ஆட்­ட­நா­ய­க­னாக அறி­விக்­கப்­பட்­டார்.

இத்­தொ­ட­ரின் இரண்­டா­வது ஒரு­நாள் போட்டி விசா­கப்­பட்­டி­னத்­தில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!