வெற்றிக் கிண்ணங்களுக்குக் குறிவைக்கும் மேன்யூ நிர்வாகி

லண்­டன்: எ­ஃப்ஏ கிண்­ணக் காற்­பந்­துத் தொட­ரின் காலி­றுதி ஆட்­டத்­தில் மேன்யூ இன்று பின்னிரவு ஃபுல்ஹம்மை எதிர்­கொள்­ள­வுள்ள நிலை­யில், நியூ­கா­சலை வீழ்த்தி லீக் கிண்­ணத்தை வென்­றது தமது குழு­விற்கு மிக­வும் ஊக்­க­ம­ளிப்­ப­தாக உள்­ளது என்று சொன்­னார் மான்­செஸ்­டர் யுனை­டெட்­டின் நிர்­வாகி எரிக் டென் ஹாக்.

ஆறு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு லீக் கிண்­ணத்தை வென்­றது மேலும் பல வெற்­றிக் கிண்­ணங்­க­ளைக் கைப்­பற்ற வேண்­டும் என்ற ஆர்­வத்தை மேன்­யூ­விடம் தூண்­டி­யுள்­ள­தாக அவர் சொன்­னார்.

வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற யூரோப்பா லீக் தொட­ரி­ல் மேன்­யூ­வின் மார்­கஸ் ரே‌ஷ்ஃ­பர்ட் போட்ட வெற்றி கோலைத் தொடர்ந்து, காலிறுதிச் சுற்­றுக்­கும் முன்­னே­றி­யுள்­ளது மேன்யூ.

“ரே‌ஷ்ஃ­பர்ட்­டின் மேம்­பட்ட ஆட்­டத்­தி­றன் அவ­ருக்கு அதிக கோல்­க­ளை­யும் குழு­விற்கு அதிக வெற்­றி­க­ளை­யும் தரு­கிறது,” என்­றார் ஹாக்.

சிங்­கப்­பூர் நேரப்­படி இன்று பின்னிரவு 12.30 மணிக்கு நடை­பெ­ற­வுள்ள நியூ­கா­ச­லுக்கு எதி­ரான ஆட்­டத்­தில், நான்கு ஆட்­டங்­கள் தடை விதிக்­கப்­பட்­டுள்ள கேச­மிரோ விளை­யா­ட­மாட்­டார்.

ஆண்­டனி மார்­‌சியால், ஆண்டனி ஆகிய இரு­வ­ரும் காய­ம­டைந்­துள்­ள­தால் இன்­றைய ஆட்­டத்­தில் விளை­யா­டு­வது சந்­தே­கம்.

காயத்­தில் இருந்து மீண்­டுள்ள கிறிஸ்­டி­யன் எரிக்­சன் இன்று கள­மி­றங்­கக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!