முன்னிலையை வலுவாக்க ஆர்சனல் ஆர்வம்

லண்­டன்: மான்­செஸ்­டர் சிட்டி காற்­பந்­துக் குழு­வு­ட­னான புள்­ளி ­இ­டை­வெ­ளியை மேலும் அதி­க­ரிக்­கும் எண்­ணத்­து­டன் இன்று கிறிஸ்­டல் பேலஸ் குழுவை எதிர்­கொள்­கிறது ஆர்­ச­னல்.

இன்று இரவு நடை­பெ­ற­வுள்ள இந்த இபி­எல் ஆட்­டத்­தில், ஆர்­ச­னல் வென்­று­விட்­டால் இரண்­டா­வது இடத்­தில் இருக்­கும் சிட்­டி­யு­ட­னான புள்­ளி­கள் இடை­வெளி எட்­டாக அதி­க­ரிக்­கும். பட்­டி­ய­லில் முதல் இடத்­தில் இருக்­கும் ஆர்­ச­ன­லின் நிலையை இது மேலும் வலு­வாக்­கும்.

தனது சொந்த மண்­ணில் இன்று பேலசை எதிர்­கொள்­ள­வுள்ள ஆர்­ச­னல், தற்­போது ஆறு புள்­ளி­கள் முன்­னி­லை­யில் உள்­ளது.

இந்த ஆட்­டத்­தில் பேலசை வீழ்த்­தி­விட்­டால், இபி­எல் பட்­டத்தை மீண்­டும் வெல்­ல­வேண்­டும் என்ற ஆர்­ச­ன­லின் ஆசை நிறை­வே­று­வ­தற்­கான வாய்ப்­பா­கவே அது பார்க்­கப்­ப­டு­கிறது. ஆர்­ச­னல் கடை­சி­யாக 2004ஆம் ஆண்­டில் இப்­பட்­டத்தை வென்­றது.

நடப்பு பரு­வத்­தில் கடைசி ஐந்து இபி­எல் ஆட்­டங்­க­ளாக தொடர் வெற்­றியை பதிவு செய்து வரும் ஆர்­ச­னல், சென்ற வாரம் யூரோப்பா லீக்­கில் இருந்து வெளி­யே­றி­யது.

“இத்­தோல்வி அக்­கு­ழு­விற்கு சிறந்த படிப்­பி­னை­யாக இருக்­கும்,” என்று முன்­னாள் லிவர்­பூல் வீரர் ரெட்­னேப் சொன்­னார்.

ஆர்­ச­னல் சொந்த மண்­ணில் பேல­சு­டன் மோதிய கடைசி நான்கு ஆட்­டங்­களில் மூன்று சம­நி­லை­யா­க­வும் ஒன்­றில் பேல­சும் வெற்றி பெற்­றி­ருந்­தது.

இவ்­வாண்­டில் பேலஸ் குழு, இன்­னும் ஒரு வெற்­றி­யைக்­கூட பதிவு செய்­ய­வில்லை. கடைசி நான்கு ஆட்­டங்­களில் அக்­குழு ஒரு கோல்­கூட போட­வில்லை என்­ப­தும் பேலஸ் மோச­மான நிலை­யில் உள்­ள­தைக் காட்­டு­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!