கதிகலங்கிப்போன இலங்கை

கதிகலங்கிப்போன இலங்கை

1 mins read
b6101100-003b-4c54-a770-9e1f8c4ce8d9
-

ஆக்­லாந்து: ஒரு­நாள் கிரிக்­கெட் ஆட்­டத்­தில் 198 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் இலங்­கை­யைச் சாய்த்­துள்­ளது நியூ­சி­லாந்து. இரு அணி­களும் மோதும் ஒரு­நாள் கிரிக்­கெட் தொட­ரின் முதல் ஆட்­டம் நியூ­சி­லாந்­தின் ஆக்­லாந்து நக­ரில் உள்ள ஈடன் பார்க் விளை­யாட்­ட­ரங்­கில் நேற்று நடை­பெற்­றது.

அதில் முத­லில் பந்­த­டித்த நியூ­சி­லாந்து 49.3 ஓவர்­களில் அனைத்து விக்­கெட்­டு­க­ளை­யும் இழந்து 274 ஓட்­டங்­களை எடுத்­தது. இலங்­கை­யின் வெற்றி இலக்கு 275 ஓட்­டங்­க­ளாக இருந்­தது.

எனி­னும், 19.5 ஓவர்­க­ளி­லேயே எல்லா விக்­கெட்­டு­க­ளை­யும் இழந்­தது இலங்கை. அந்த அணி 76 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்­தது.

இலங்­கை­யின் மூன்று பந்­த­டிப்­பா­ளர்­கள் மட்­டுமே குறிப்­பி­டத்­தக்க எண்­ணிக்­கை­யில் ஓட்­டங்­களை எடுத்­த­னர். ஏஞ்­சிலோ மேத்­தி­யூஸ் 18 ஓட்­டங்­களை எடுத்­தார், சாமிக்கா கரு­ணா­ரத்ன 11 ஓட்­டங்­களை எடுத்­தார், லஹிரு குமாரா 10 ஓட்­டங்­களை எடுத்­தார்.

இலங்­கைக்கு முத­லில் கள­மி­றங்­கிய இரண்டு பந்­த­டிப்­பா­ளர்­களும் முதல் நான்கு ஓவர்­களுக்­குள்­ளேயே வெளி­யேற்­றப்­பட்­ட­னர். அதற்­குப் பிறகு அணி சரி­யா­மல் பார்த்­துக்­கொள்­ளும் பொறுப்பு ஈராண்­டு­க­ளாக ஒரு­நாள் ஆட்­டம் எதி­லும் ஆடா­தி­ருந்த ஏஞ்­சிலோ மேத்­தி­யூஸ்­மீது விழுந்­தது.

ஆட்­டத்­தில் நியூ­சி­லாந்­துக்கு ஆக அதிக ஓட்­டங்­களை எடுத்­த­வர் ஃபி ஏலன். அவர் 51 ஓட்­டங்­க­ளைக் குவித்­தார்.

இத்­தொ­ட­ரின் இரண்­டா­வது ஆட்­டம் நியூ­சி­லாந்­தின் கிரைஸ்ட்­சர்ச் நக­ரில் நாளை மறு­நாள் நடை­பெ­ற­வுள்­ளது. மூன்­றா­வது ஆட்­டம் ஹேமில்­டன் நக­ரில் நடை­பெ­றும்.