புதுடெல்லி: பெங்களூரு எஃப்சி குழுவிற்கெதிரான இந்திய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டியில் பாதியிலேயே வெளியேறியதற்காக கேரளா பிளாஸ்டர்ஸ் குழுவிற்கு அனைத்திந்தியக் காற்பந்துக் கூட்டமைப்பு நான்கு கோடி ரூபாய் (S$648,000) அபராதம் விதித்துள்ளது. அத்துடன், அக்குழு பொது மன்னிப்பு கேட்கவும் ஒழுங்குமுறை நடவடிக்கைக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. மன்னிப்பு கோராவிடில் அபராதம் ரூ.6 கோடியாக உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்ற மாதம் 3ஆம் தேதி நடந்த அந்த 'பிளே ஆஃப்' சுற்று ஆட்டத்தில், சுனில் சேத்ரி 'ஃபிரீ கிக்' மூலம் அடித்த கோல் செல்லும் என்று நடுவர் அறிவித்ததை எதிர்த்து பிளாஸ்டர்ஸ் குழு திடலை விட்டு வெளியேறியது. அந்தக் குழுவின் பயிற்றுநர் இவான் வுகொமனோவிச்சிற்கு பத்து ஆட்டம் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஐஎஸ்எல் காற்பந்துக் குழுவிற்கு ரூ.4 கோடி அபராதம் விதிப்பு
1 mins read

