தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல்லில் விளையாட வராதீர்கள்: ஆஸ்திரேலியர்மீது சேவாக் காட்டம்

1 mins read

கௌகாத்தி: இந்தியாவில் நடந்துவரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இதுவரை தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி கண்டது. சனிக்கிழமை நடந்த போட்டியில் டெல்லி அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 57 ஓட்ட வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. 200 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை டெல்லி அணி விரட்டிய நிலையில், அதன் தலைவர் டேவிட் வார்னர் 55 பந்துகளில் 65 ஓட்டங்களை எடுத்தார். அவரது மந்தமான ஆட்டத்தால் கடுப்பானார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக். "வார்னருக்கு ஆங்கிலத்தில் சொல்ல வேண்டிய நேரமிது என நினைக்கிறேன். ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுக்கிறார். அதுபோல் ஆடுங்கள். இல்லையேல், ஐபிஎல்லில் விளையாட வராதீர்கள்," என்று காட்டமாகக் கூறியுள்ளார் சேவாக்.