இந்த ஐபிஎல் பருவத்தின் முதல் சதம்

இந்த ஐபிஎல் பருவத்தின் முதல் சதம்

2 mins read
35427c9c-2de6-483e-b5e1-de808ce57b32
-

கோல்­கத்தா: இந்த 'ஐபி­எல்' எனப்­படும் இந்­திய பிரி­மி­யர் லிக் கிரிக்­கெட் பரு­வத்­தில் முதல் சத­ம­டித்த வீரர் என்ற பெரு­மை­யைப் பெற்­றுள்­ளார் சன்­ரை­சர்ஸ் ஐதரா­பாத் குழு­வின் ஹேரி புரூக். கோல்­கத்தா நைட் ரைடர்­சுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் 55 பந்­து­களில் 100 ஓட்­டங்­களை எடுத்­தார் இங்­கி­லா­தைச் சேர்ந்த 24 வயது புரூக்.

இவர் ஆட்­டத்­தில் 12 பவுண்ட்ரி­க­ளை­யும் மூன்று சிக்­சர்­க­ளை­யும் அடித்­து அசத்தினார்.

முத­லில் பந்­த­டித்த ஐத­ரா­பாத் நான்கு விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 228 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது. வெற்றி இலக்கை அடைய முடி­யா­மல் ஏழு விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 205 ஓட்­டங்­களை மட்­டுமே கோல்­கத்தா எடுத்­தது.

'ஐபி­எல்' வர­லாற்­றில் இங்­கி­லாந்­தைச் சேர்ந்த ஐந்து வீரர்­கள் மட்டுமே சத­ம­டித்­தி­ருக்­கின்­ற­னர். அவர்­களில் ஒரு­வ­ராக புரூக் திகழ்கிறார்.

கெவின் பீட்­டர்­சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்­லர், பாய்ர்ஸ்­டோர் ஆகி­யோர் 'ஐபி­எல்'லில் சத­ம­டித்­தி­ருக்­கும் இதர இங்­கி­லாந்து வீரர்­கள்.

அண்­மைக் கால­மாக உல­கக் கிரிக்­கெட்­டின் அனைத்து வகைப் போட்­டி­களிலும் ஆகச் சிறந்த பந்­த­டிப்­பா­ளர்­களில் ஒரு­வ­ராக உரு­வெ­டுத்­துள்­ளார் புரூக்.

சென்ற ஆண்டு பிப்­ர­வரி மாதம் பாகிஸ்­தான் சூப்­பர் லீக் குழு­வான லாகூர் கலாண்­டர்­சுக்கு இவர் 48 பந்­து­களில் 102 ஓட்­டங்­களை எடுத்து சத­ம­டித்­தார். அதுவே டி20 கிரிக்­கெட் ஆட்­டங்­களில் இவர் அடித்த முதல் சதம்.

அதற்­குப் பிறகு சென்ற ஆண்டு டிசம்­பர் மாதம் புரூக்கை 1.35 மில்லியன் பவுண்ட் தொகைக்கு வாங்­கி­யது ஐத­ரா­பாத்.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி 'ஐபி­எல்' பட்­டி­ய­லில் ஏழாம் இடத்தை வகிக்­கிறது சன்­ரை­சர்ஸ் ஐத­ரா­பாத். நான்­கா­வது இடத்­தில் உள்­ளது கோல்­கத்தா நைட் ரைடர்ஸ்.

லீக் பட்­டி­ய­லில் முத­லி­டம் வகிக்­கும் குழு ராஜஸ்­தான் ராயல்ஸ்.