நியூகாசலை அதிரவைத்த வில்லா

நியூகாசலை அதிரவைத்த வில்லா

1 mins read

பர்­மிங்­ஹம்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­தில் அபாரமாக விளை­யா­டி­வந்த நியூ­கா­சல் யுனை­டெட்டை எதி­ர்பாரா வித­மாக 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது ஆஸ்­டன் வில்லா.

ஆட்­டத்­தின் 11வது நிமி­டத்­தில் வில்­லாவை முன்­னுக்கு அனுப்­பி­னார் ஜேக்­கப் ரேம்சி. பிறகு 64, 83வது நிமி­டங்­களில் இரண்டு கோல்­க­ளைப் போட்­டார் வில்­லா­வின் நட்­சத்­தி­ர தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர் ஒலி வாட்­கின்ஸ்.

ஆட்­டம் முழு­வ­தும் நியூ­கா­ச­லை­விட வில்லா மிக­வும் சிறப்பாக விளை­யா­டி­யது. கடந்த சில வாரங்­க­ளாக அசத்திவரும் வில்லா, லீக்­கில் தொடர்ந்து ஐந்­தா­வது ஆட்­டத்­தில் வெற்றிகண்டுள்ளது.