ஐபிஎல் கிரிக்கெட்டில் அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் விக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்டில் அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் விக்கெட்

1 mins read
9f6b5654-0e19-46e6-ad7d-a24e9840ef4f
ஐதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் தனது முதல் விக்கெட்டை எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர் (வலது). படம்: ஏஎஃப்பி -

ஐதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் மும்பை இந்தியன்ஸ் குழுவிற்கு ஆடும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் அக்குழுவின் கடைசி ஓவரில் விக்கெட்டைத் தூக்கினார் அர்ஜுன்.

ஆட்டத்தில் வெற்றிகாண கடைசி ஓவரில் ஐதராபாத்துக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் புவனேஷ்வர் குமாரை வெளியேற்றினார் அர்ஜுன்.

புவனேஷ்வர் குமார் அடித்த பந்தை ரோகித் சர்மா பிடித்தார்.

14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்மை வென்றது.

முதலில் பந்தடித்த மும்பை, ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ஓட்டங்களை எடுத்தது.

19.5 ஓவர்களுக்குள் எல்லா விக்கெட்டுகளையும் இழந்த ஐதராபாத் 178 ஓட்டங்களை எடுத்தது.