சவுத்ஹேம்டனுடன் சமநிலை; ஆர்சனலுக்கு ஏமாற்றம்

சவுத்ஹேம்டனுடன் சமநிலை; ஆர்சனலுக்கு ஏமாற்றம்

1 mins read
46af3bae-11db-440e-b552-ae3224992229
-

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் ஆர்சனலும் சவுத்ஹேம்டனும் தரப்புக்கு மூன்று கோல்கள் போட்டு சமநிலை கண்டன.

மூன்று புள்ளிகளுக்குப் பதிலாக ஒரு புள்ளி மட்டுமே கிடைத்துள்ளதால் ஆர்சனலின் நிர்வாகி மிக்கேல் அர்டேட்டா ஏமாற்றம் தெரிவித்தார்.

ஆட்டம் தொடங்கி 15 நிமிடங்களில் சவுத்ஹேம்டன் இரண்டு கோல்கள் போட்டு முன்னிலை வகித்தது.

20வது நிமிடத்தில் ஆர்சனல் அதன் முதல் கோலைப் போட்டது. 66வது நிமிடத்தில் சவூத்ஹேம்டன் மூன்றாவது கோலைப் போட்டது.

88வது நிமிடத்திலும் 90வது நிமிடத்திலும் ஆர்சனல் கோல்களைப் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது.