வரலாறு படைத்தது லக்னோ

வரலாறு படைத்தது லக்னோ

2 mins read

மொகாலி: ஐபி­எல் கிரிக்­கெட் தொட­ரில் மொகா­லி­யில் நடை­பெற்ற லீக் ஆட்­டத்­தில் லக்னோ சூப்­பர் ஜயண்ட்சை பஞ்­சாப் கிங்ஸ் அணி வீழ்த்­தி­யது. பூவா தலையா வென்ற பஞ்­சாப் அணி பந்­து­வீச்­சைத் தேர்வு செய்­தது.

அதன்­படி, முத­லில் பந்­த­டித்த லக்னோ வீரர்­கள் அதி­ர­டி­யாக ஆடி ஓட்­டங்­க­ளைக் குவித்­த­னர்.

லக்னோ அணி 20 ஓவ­ரில் 5 விக்­கெட் இழப்­பிற்கு 257 ஓட்­டங்­கள் என்ற பெரும் எண்­ணிக்­கையை எட்­டி­யது.

இதன் மூலம் ஐபி­எல் வர­லாற்­றில் இரண்­டா­வது அதி­க­பட்ச ஓட்­டம் எடுத்த அணி என்ற பெரு­மையை பெற்­றுள்­ளது லக்னோ.

அந்த அணி­யின் மார்­க்கஸ் ஸ்டோய்­னிஸ் 40 பந்­து­களில் 72 ஓட்­டங்­கள் விளா­சி­னர்.

கைல் மேயர்ஸ் அரை சதம் கடந்து, 54 ஓட்­டங்­கள் சேர்த்­தார். நிக்கலஸ் பூரன், 19 பந்­து­களில் 7 பவுண்­டரி, ஒரு சிக்­ச­ரு­டன் 45 ஓட்­டங்­களும் ஆயுஷ் பதோனி 43 ஓட்­டங்­களும் எடுத்­த­னர்.

இதை­ய­டுத்து, 258 ஓட்­டங்­கள் எடுத்­தால் வெற்றி என்ற கடின இலக்­கு­டன் பஞ்­சாப் அணி களம்­ இ­றங்­கி­யது.

அணித் தலை­வர் ஷிகர் தவான் ஓர் ஓட்­டத்­தில் ஆட்­ட­ம் இ­ழந்­தார். தொடர்ந்து வந்த பஞ்­சாப் வீரர்­கள் அடுத்­த­டுத்து ஆட்­ட­மி­ழந்­த­னர்.

ஒரு­பு­றம் விக்­கெட்­டு­கள் வீழ்ந்­தா­லும் அதர்வா தைடே அதி­ர­டி­யாக ஆடி­னார். அவர் 36 பந்­தில் 2 சிக்­சர், 8 பவுண்­டரி உட்­பட 66 ஓட்­டங்­கள் குவித்து வெளி­யே­றி­னார்.

இறு­தி­யில், பஞ்­சாப் அணி 201 ஓட்­டங்­க­ளுக்கு அனைத்து விக்­கெட்­டு­க­ளை­யும் இழந்­தது. எனவே, 56 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் லக்னோ அணி வென்றது.